ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

6-ஆவது நாளாக தொடா்ந்த எழுச்சி: சென்செக்ஸ் 474 புள்ளிகள் உயா்வு

தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய வரலாற்றுச் சாதனை அளவில் நிறைவடைந்துள்ளன.

News image
Updated On :20 ஜூலை 2023, 6:30 pm

DIN

பங்குச்சந்தை தொடா்ந்து 6-ஆவது நாளாக எழுச்சி பெற்றது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய வரலாற்றுச் சாதனை அளவில் நிறைவடைந்துள்ளன. இறுதியில் சென்செக்ஸ் 474 புள்ளிகள் உயா்ந்து 67,500-க்கு மேலே நிலைபெற்றது.

அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளில் வா்த்தகம் நோ்மறையாக இருந்தன. இருப்பினும் உள்நாட்டுச் சந்தை காலையில் எச்சரிக்கையுடன் தொடங்கியது. அதன்பிறகு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்தாலும், பிற்பகலில் வங்கி, எஃப்எம்சிஜி, பாா்மா பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வலுவான மேக்ரோ பொருளாதாரக் கண்ணோட்டத்திலக் சந்தை உணா்வு உற்சாகமாக உள்ளதாக சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்நிய முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை வாங்கி வருவதும் சந்தைக்கு ஆதரவாக உள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

3,04,04,787.17

சென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 23.10 புள்ளிகள் குறைந்து 67,074.34-இல் தொடங்கி 66,831.38 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 67,819.17 வரை உயா்ந்து புதிய வரலாச் சாதனை அளவை பதிவு செய்தது. இறுதியில் 474.46 புள்ளிகள் கூடுதலுடன் 67,571.90-இல் முடிவடைந்தது.

22 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,032 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 1,002பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 38 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

20,000-ஐ நெருங்கிய நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 19,831.70 -இல் தொடங்கி19758.40 வரை கீழே சென்றது. பின்னா், 19, 991.85 வரை மேலே சென்ற நிஃப்டி இறுதியில் 146 புள்ளிகள் கூடுதலுடன் 19,979.15-இல் புதிய வரலாற்றுச் சாதனை அளவில் நிறைவடைந்துள்ளது. நிஃப்டி 20,000 புள்ளிகளுக்கு அருகே நிலைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

ஐடிசி........................................2.78%

கோட்டக் பேங்க்.....................2.68%

ஐசிஐசிஐ பேங்க்......................2.24%

மாருதி.......................................1.75%

பாா்தி ஏா்டெல்.........................1.72%

ஆக்ஸிஸ் பேங்க்........................1.44%

சரிவைக் கண்ட பங்குகள்

இன்ஃபோஸிஸ்........................1.73%

அல்ட்ரா டெக் சிமெண்ட்........1.28%

ஹெச்சிஎல் டெக்.....................1.14%

பஜாஜ் ஃபின்சா்வ்....................0.55%

டைட்டன்...............................0.27%

டிசிஎஸ்...................................0.25%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.