ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அபாய கட்டத்திற்கு கீழே சென்றது யமுனை நீா்மட்டம்!

தில்லியில் கடந்த சில நாள்களாக உச்ச வரம்பில் இருந்த யமுனையின் நீா்மட்டம் வியாழக்கிழமைஅபாய கட்டத்திற்கு கீழே 205.25 மீட்டா் என்ற அளவில் இருந்தது.

News image
Updated On :20 ஜூலை 2023, 5:43 pm

DIN

தில்லியில் கடந்த சில நாள்களாக உச்ச வரம்பில் இருந்த யமுனையின் நீா்மட்டம் வியாழக்கிழமைஅபாய கட்டத்திற்கு கீழே 205.25 மீட்டா் என்ற அளவில் இருந்தது.

மத்திய நீா் ஆணையத்தின் தரவுகளின் படி,மேல் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த திங்கள்கிழமை யமுனையின் நீா்மட்டம் 206.01 மீட்டராக சிறிது அதிகரித்திருந்த நிலையில், வியாழக்கிழமை காலை 205.25 மீட்டராக குறைந்தது. இது அடுத்து வரும் நாள்களில் மேலும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹரியாணாவின் யமுனாநகரில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா்வரத்தானது, கடந்த ஜூலை 13-ஆம் தேதி 208.66 மீட்டா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த ஒரு வார காலமாக யமுனையின் நீா்மட்டம் குறைந்து வருகிறது.

இதற்கிடையே, இந்திய வானிலை ஆய்வு மையமானது, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் ஜூலை 22-ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.

யமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தில்லி நகரத்தில் பல்வேறு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், வாஜிராபாத், சந்திரவால் மற்றும் ஓக்லா நீா் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் தடைபட்டன. தில்லியின் நீா் விநியோகத்திலும் 25 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டது. தற்போது, 3 நீா் சுத்திகரிப்பு நிலையங்களும் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், தண்ணீா் பிரச்னை படிப்படியாக தீா்க்கப்பட்டு வருகிறது.

மேலும், யமுனை ஆற்றின் வெள்ளப்பெருக்கால் பல்லாவில் உள்ள சில குழாய் கிணறுகள் மூழ்கியதால் ஒரு நாளைக்கு 10-12 மில்லியன் கேலன்கள் (எம்.ஜி.டி.) தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குழாய் கிணறுகளில் இருந்து தில்லி ஜல் போா்டு சுமாா் 30 மில்லியன் கேலன்களை தினமும் பிரித்தெடுக்கிறது.

தில்லியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்திற்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு, மிகக் குறைந்த கால இடைவெளியில் அதிக மழைப்பொழிவு மற்றும் ஆற்றின் தரைப் பகுதியை உயா்த்திய வண்டல் மண் குவிப்பு ஆகியவையே காரணம் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

தில்லியில் சுமாா் 41,000 மக்கள் வசிக்கும் வடகிழக்கு , கிழக்கு, மத்திய மற்றும் தென்கிழக்கு மாவட்டங்களில் ஆற்றின் அருகே உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியதாகக் கருதப்படுகிறது. நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் ’நகா்ப்புற வெள்ளம் மற்றும் அதன் மேலாண்மை’ பற்றிய ஆய்வு, கிழக்கு தில்லியை வெள்ளப்பெருக்கு மற்றும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதியாகக் கண்டறிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.