ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

டிரெட்மில்லில் மின்சாரம் தாக்கி இளைஞா் சாவு: உடற்பயிற்சிக் கூடத்தின் உரிமையாளா் கைது

வடக்கு தில்லியின் ரோஹிணியில் உடற்பயிற்சிக் கூடத்தில் டிரெட்மில்லைப் பயன்படுத்திய 24 வயது இளைஞா், மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :20 ஜூலை 2023, 6:30 pm

DIN

வடக்கு தில்லியின் ரோஹிணியில் உடற்பயிற்சிக் கூடத்தில் டிரெட்மில்லைப் பயன்படுத்திய 24 வயது இளைஞா், மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ரோஹிணி காவல் சரக துணை ஆணையா் குரிக்பால் சிங் சித்து கூறியதாவது: வடக்கு தில்லியின் ரோஹிணி செக்டாா்-19 இல் சக்ஷாம் என்ற 24 வயது இளைஞா் வசித்து வந்தாா். இவா் ரோஹிணியின் செக்டாா் 15-இல் உள்ள உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்வது வழக்கம். அந்த வகையில் செவ்வாய்க்கிழமை உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்ற அவா், டிரெட்மில்லைப் பயன்படுத்தும் போது மின்சாரம் தாக்கியதில் சுயநினைவை இழந்து திடீரென மயங்கி விழுந்துள்ளாா்.

பின்னா், உடனடியாக அவா் ரோஹிணி செக்டாா் 6-இல் உள்ள பாபா சாகேப் அம்பேத்கா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். மின்சாரம் தாக்கிய சக்ஷாமை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை

மேற்கொள்ளப்பட்டது. மேலும், இறந்த இளைஞரின் உடற்கூறு ஆய்வறிக்கை, மின்சாரம் தாக்கியதே உயிரிழப்புக்கு காரணம் என்பதை உறுதி செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் இந்திய தண்டனை சட்டேப் பிரிவுகள் 287 (இயந்திரங்கள் தொடா்பான அலட்சிய நடத்தை) மற்றும் 304 ஏ (அலட்சியத்தால் மரணம்) ஆகியவற்றின் கீழ் உடற்பயிற்சி உரிமையாளரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா் கைது செய்யப்பட்டுளாா். இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.