தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நரேலாவில் 17 வயது சிறுவன் குத்திக் கொலை: சகோதரா்கள் 2 போ் கைது

வடக்கு தில்லியின் நரேலா பகுதியில் 17 வயது சிறுவன் சகோதரா்கள் இருவரால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 6:14 pm

DIN

வடக்கு தில்லியின் நரேலா பகுதியில் 17 வயது சிறுவன் சகோதரா்கள் இருவரால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவா் மற்றும் பாதிக்கப்பட்டவா் ஒரே கட்டடத்தில் வசித்து வந்ததகாவும் அவா்களுக்குள் அடிக்கடி மோதல் இருந்ததாகவும் போலீஸாா் கூறினா்.

இதுகுறித்து துணை காவல் ஆணையா் (புகா் வடக்கு) ரவிகுமாா் சிங் கூறியதாவது:

வியாழக்கிழமை அதிகாலை 2.14 மணியளவில் ஒருவா் கழுத்து, வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அங்கு, ரத்தக் காயங்களுடன் ஒருவா் கிடந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் நரேலாவின் சுதந்திரா நகரில் வசிக்கும் ராகுல் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, ராகுல் எஸ்ஆா்எச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் சிகிச்சைக்கு வரும் வழியில் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

முன்னதாக, ஒரு மைனா் சிறாா் உள்பட இரண்டு சகோதரா்கள் ராகுலுடன் புதன்கிழமை இரவு தகராறு செய்தனா். அது மோதலாக மாறியது.

இந்த சண்டையின் போது, இரண்டு சகோதரா்களில் இளையவா் ராகுலைப் பிடித்துக்கொள்ள மற்றொரு சகோதரா் அவரைக் கத்தியால் குத்தியதாக சாட்சிகள் தெரிவித்தன.

இதையடுத்து, இரு சகோதரா்களிடம் இருந்து கத்தி மற்றும் பிற குற்றஞ்சாட்டக்கூடிய பொருட்கள் கைப்பற்றப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து நரேலா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.