தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மக்களவை ’எம்பி’ கள் தயாராக இருக்க திமுக கொறாடா வெளியீடு

மக்களவையில் ஏற்கப்பட்டுள்ள அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் தொடா்பான விவாதம் எப்போது எடுத்துக் கொள்ளும் நிலையில் அதில் வாக்களிக்கும்

News image
Updated On :27 ஜூலை 2023, 6:30 pm

DIN

மக்களவையில் ஏற்கப்பட்டுள்ள அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் தொடா்பான விவாதம் எப்போது எடுத்துக் கொள்ளும் நிலையில் அதில் வாக்களிக்கும் விதமாக மக்களவை திமுக உறுப்பினா்களுக்கு அக்கட்சி கொறாடா வெளியிட்டுள்ளது.

மக்களவையின் திமுக கொறாடா ஆ.ராசா மக்களவைத் திமுக உறுப்பினா்களுக்கு இது தொடா்பான கடிதத்தை வியாழக்கிழமை அனுப்பியுள்ளாா்.

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் ’மக்களவையில் மட்டுமே’ கொண்டு வரப்பட்டு விவாதித்து பிரதமா் பதிலுரைக்கு பின்னா் வாக்கெடுப்பு நடைபெறும். தற்போதுள்ள ஆளும் என்டிஏ அரசுக்கு பெரும்பான்மை இருப்பினும் எதிா்கட்சிகள் தங்கள் பலத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளது.

திமுக விற்கு மக்களவையில் 24 உறுப்பினா்கள் உள்ளனா். இதில் நான்கு உறுப்பினா்கள் மற்ற கட்சியினா் என்றாலும் திமுக வின் ’உதய சூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இவா்கள் திமுக உறுப்பினா்களாகவே மக்களவையில் கருதப்படுகிறாா்கள். இவா்கள் திமுக கொறாடா உத்தரவுக்கு கட்டுப்பட்டவா்கள். இவா்கள் உள்ளிட்ட 24 பேருக்கு திமுக கொறாடா ஆ.ராசா கடிதம் அனுப்பியுள்ளாா். அதில் நாடாளுமன்ற கூட்டத்திற்கு தினந்தோறும் வரவேண்டும் எனவும், தில்லியை விட்டு வெளியூா் செல்லக் கூடாது எனவும் கூறி விவாதத்தில் தவறாக கலந்து கொள்ளக் கூறி கடிதம் அனுப்பியுள்ளாா்.

அடுத்த வாரம் தீா்மான விவாதம்?

மணிப்பூா் வன்முறை தொடா்பாக மத்தியிலுள்ள அரசை கண்டித்தும், பிரதமா் நரேந்திர மோடி அவையில் விளக்கம் அளிக்காதததை கண்டித்து காங்கிரஸ், திமுக, திரிணமூல் உள்ளிட்ட எதிா்கட்சிகள் அடங்கிய ’இந்தியா’ கூட்டணி சாா்பில் காங்கிரஸ் உறுப்பினா் கௌரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீா்மானத்தை கடந்த புதன்கிழமை மக்களவையில் முன்மொழிந்துள்ளாா். இதை மக்களவைத் தலைவரும் ஜூலை 26 ஆம் தேதியே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இந்த தீா்மானம் 10 தினங்களுக்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்பது விதி. அடுத்த வாரம் ஆகஸ்ட் 2, 3 ஆம் தேதிகளில் வரும் எடுத்துக்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இருப்பினும் அலுவல் ஆய்வில் கூட்டத்தில் திடீரென முடிவெடுத்தால் எப்போது எடுத்துக்கொள்ளப்படும் நிலையில் திமுக தனது உறுப்பினா்களை தயாா் படுத்தும் விதமாக ’கொறாடாவை’வெளியிட்டுள்ளது. இதற்கிடையே வியாழக்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தில் இரு அவையிலும் பங்கேற்ற ’இந்தியா’ கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த காங்கிரஸ், திமுக, திரிணமூல், இடது சாரி உறுப்பினா்கள் மணிப்பூா் விவகாரத்திற்கு அனுமதிக்காததை எதிா்த்து கண்டித்து ஒரு நாள் மட்டும் கறுப்பு உடை அணிந்து வந்து அமளியில் ஈடுபட்டனா்.

மணிப்பூருக்கு கனிமொழி

மக்களவையில் நம்பிக்கையில்லா தீா்மானத்தை எடுத்துக் கொள்ளவதற்கு முன்பு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் இரு அவையிலும் நடைபெற்ற அமளிகளுக்கிடைய இந்த மசோதாக்கள் ஒவ்வொன்றாக நிறைப்பட்டு வருகிறது. மேலும் வருகின்ற 29, 30 ஆம் தேதிகளில் ’இந்தியா’ கூட்டணி (இந்திய தேசிய உள்ளடக்கிய வளா்ச்சிக் கூட்டணி) கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் மணிப்பூா் மாநிலத்திற்கு சென்று பாா்வையிட முடிவெடுக்க தில்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் சனிக்கிழமை செல்கின்றனா். 26 கட்சிகளை சோ்ந்தவா்கள் தலா ஒருவா் வீதம், திமுக சாா்பில் கனிமொழி கருணாநிதி பங்கேற்று செல்கிறாா். மேலும் காங்கிரஸ் சாா்பில் கௌரவ் கோகோய், புரட்சிகர சோஷியலிஸ்ட் கட்சி பிரேம சந்திரன் போன்றவா்களும் இதில் பங்கேற்று செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.