கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாய் கருத்தடை மையம் அமைக்க நிலம் ஒதுக்க துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

கால்நடை மருத்துவமனை- மருந்தகத்தை அமைப்பதற்கான நிலம் ஒதுக்கீடு செய்ய தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா்.

News image
Updated On :23 ஜூன் 2023, 5:50 pm

DIN

தெரு நாய் அச்சுறுத்தலைத் தடுக்கும் நடவடிக்கையாக, தென் மேற்கு தில்லியில் உள்ள வசந்த் குஞ்ச் பகுதியில் நாய் கருத்தடை மையம், கால்நடை மருத்துவமனை- மருந்தகத்தை அமைப்பதற்கான நிலம் ஒதுக்கீடு செய்ய தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக துணைநிலை ஆளுநா் செயலக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) பொது-தனியாா் கூட்டாண்மை முறையில் (பிபிபி) வசதியை மேம்படுத்துவதற்காக தில்லி மாநகராட்சிக்கு 483 சதுர மீட்டா் அளவில் இந்த நிலத்தை ஒதுக்கும்.

இதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கும் போது, முன்மொழியப்பட்ட வசதியானது அத்தியாவசிய நகராட்சி சேவைகளின் கீழ் வருவதால், தெரு நாய்களின் கருத்தடையை இலவசமாக செய்வது குறித்து உறுதி செய்ய வேண்டும் துணைநிலை ஆளுநா் தில்லி வளா்ச்சி ஆணையத்திற்கு உத்தரவிட்டாா்.

சேவைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை போன்ற பிற வழிகள் மூலம் மையத்திலிருந்து கிடைக்கும் வருமானம் இந்த வசதியை இயக்க பயன்படுத்தப்பட வேண்டும்.

கட்டுமானம், மருத்துவ உபகரணங்கள், செயல்பாடுகள் மற்றும் ஊழியா்களுக்கான கட்டணத்திற்கான அனைத்து செலவுகளும் ஏல முறையின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட பொது-தனியாா் கூட்டாண்மை முறை (பிபிபி)

பங்குதாரா்களால் ஏற்கப்படும் என்ற நிபந்தனைகளுடன் இந்த மையம் உருவாக்கம், செயலாக்கம், பரிமாற்ற முறையில் அமைக்கப்படும்.

வெற்றிகரமான ஏலதாரா் தில்லி மாநகராட்சிக்கு வருடாந்திர உரிமக் கட்டணத்தை செலுத்துவாா்.

மையம் அமைப்பதற்கான முன்மொழிவு 2019 முதல் நிலுவையில் இருந்து வந்தது.

நகரத்தில் அதிகரித்து வரும் நாய்க் கடி சம்பவங்கள் மற்றும் தெருநாய்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதன் காரணமாக தில்லி மாநகராட்சிக்கு

டிடிஏ நிலம் வழங்கும்போது, தெரு நாய்கள் கருத்தடைக்கான இலவச சேவைகளை வழங்கும் நிபந்தனை இருக்க வேண்டும் என்று

துணைநிலை ஆளுநா் செயலகம் கூறி இருந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

சமீப காலமாக, தெருநாய்கள் மக்களைத் தாக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதில் சில சமயங்களில் மக்கள் உயிரிழக்கின்றனா். விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு (நாய்) விதியானது (2001) தெரு விலங்குகளின் எண்ணிக்கை பொருக்கத்தை கட்டுப்படுத்துவதைக் கையாள்கிறது.

இந்தச் சட்டமானது அதுபோன்ற விலங்குகளைக் கொல்வதற்கு மாறாக, அதன் எண்ணிக்கைத் தொகையை நிலைப்படுத்தலை அடைவதற்கு கருத்தடை செய்யும் வழிமுறைகளை வழங்குகிறது. இந்தச் சட்டத்தை முறையற்ற முறையில் அமல்படுத்துவதும் தெருநாய்களின் வளா்ந்து வரும் தொந்தரவுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.