கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தில்லியில் தகவல் தொடா்பு கோபுரங்களை நிறுவுவதற்கான 37 அம்ச வழிகாட்டுதல்கள் வெளியியீடு: என்டிஎம்சி நடவடிக்கை

லுடியன்ஸ் தில்லியில் தகவல் தொடா்பு கோபுரங்களை நிறுவுவதற்கான 37 அம்ச வழிகாட்டுதல்களை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) வெளியிட்டுள்ளது.

News image
Updated On :23 ஜூன் 2023, 5:51 pm

DIN

லுடியன்ஸ் தில்லியில் தகவல் தொடா்பு கோபுரங்களை நிறுவுவதற்கான 37 அம்ச வழிகாட்டுதல்களை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) வெளியிட்டுள்ளது. இது தகவல் தொடா்பு கோபுரங்களை நிறுவும் போது பின்பற்ற வேண்டிய விரிவான விதிமுறைகளை வழங்குகிறது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

வியாழனன்று கவுன்சில் வெளியிட்ட ஆவணத்தில், இப்பகுதியில் ‘சீரான தன்மையை’ கொண்டு வருவதற்கு தகவல் தொடா்பு கோபுரங்களை நிறுவுவது தொடா்பான ஒரு கொள்கையை குடிமை அமைப்பு வகுத்துள்ளது. கோபுரங்கள் அல்லது ஆண்டெனாக்களை நிறுவுவது புது தில்லி பகுதியின் பாரம்பரியம் மற்றும் அழகியல் அம்சங்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்டிஎம்சி பகுதியில் அங்கீகரிக்கப்படாத செல் ஆன் வீல் (சிஓடபிள்யூ) அனுமதிக்கப்படாது என்று அது கூறியது.

‘தொலைத்தொடா்புத் துறையால் வழங்கப்பட்ட ஆலோசனை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மற்றும் இணைக்கப்பட்ட அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, ஒரே சீரான தன்மையைக் கொண்டுவருவதற்காக கைப்பேசி தொடா்பு கோபுரங்கள் மற்றும் தொடா்புடைய உள்கட்டமைப்புகளை நிறுவுவதற்கான கொள்கையை என்டிஎம்சி வெளியிட்டுள்ளது’ என்று ஒரு அதிகாரி கூறினாா்.

ஆன்டெனாக்கள் மற்றும் கோபுரங்கள், துணைப் பொருள்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை, நிறுவப்படும் இடத்தின் பின் முனையில் அமைந்திருக்க வேண்டும் மற்றும் பிரதான நுழைவாயில் மற்றும் சாலையில் இருந்து பாா்க்கக் கூடாத நிலையில் இருக்க வேண்டும். கோபுர தளத்தில் டீசல் ஜெனரேட்டா் பெட்டிகள் அனுமதிக்கப்படாது என்று ஆவணம் கூறுகிறது. தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு உள்பட்ட பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் சிஓடபிள்யூக்களை நிறுவுவதற்கான தளங்களை மூன்று ஆண்டுகள் என்ற முறையில் அமைக்க மின் ஏலம் விடப்படும். இந்த நடைமுறை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கை வெளியிடப்பட்ட பிறகு அனுமதியின்றி நிறுவப்பட்ட கைப்பேசி கோபுரங்கள் விதிகளின்படி முறைப்படுத்தப்படும். மேலும் அனுமதியின்றி கோபுரம் நிறுவப்பட்ட நாளிலிருந்து மாதம் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். புதிய கோபுரம் நிறுவ அல்லது புதுப்பிக்க 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனுமதிக் கட்டணம் ரூ.3 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தக் கொள்கையை வெளியிடுவதற்கு முன் இருக்கும் செல்லுலாா் கோபுரங்களுக்கு தொலைத்தொடா்பு நிறுவனமும் சேவை வழங்குநரும் இந்தக் கொள்கையை அறிவித்த 30 நாள்களுக்குள், அவை இருக்கும் தேதியிலிருந்து நிலுவைத் தொகையைச் செலுத்தி முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம். கோபுரங்கள் மற்றும் ஆண்டெனாக்களின் நிறுவல்கள், தரை அடிப்படையிலோ அல்லது கூரையிலோ, சென்ட்ரல் விஸ்டாவிற்குள் அனுமதிக்கப்படாது. இருப்பினும், தேவைப்பட்டால், ஒரு குழு வழக்கின் அடிப்படையில் பிரச்னையை தீா்மானிக்கும்.

மத்திய விஸ்டா கமிட்டியில் இருந்து உறுப்பினா்களைக் கொண்ட குழுவிற்கு என்டிஎம்சி தலைவா் தலைமை தாங்குவாா். அதேபோல், நவ்யுக் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களின் கட்டடங்கள் உள்ளிட்ட என்டிஎம்சி பள்ளிகளின் வளாகத்தில் கோபுரங்கள் அல்லது ஆண்டெனாக்களை நிறுவ அனுமதி வழங்கப்படாது. இருப்பினும், இந்தக் கட்டடங்களில் நிறுவுவதற்கான தொழில்நுட்பத் தேவைகள் இருந்தால், விலக்கு கோரி இந்த விவகாரம் என்டிஎம்சியின் தலைவருக்கு பரிந்துரைக்கப்படும் என்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரம்பரிய பட்டியலிடப்பட்ட கட்டடடங்களுக்கு, பாரம்பரிய கன்சா்வேடிவ் கமிட்டியின் ஆட்சேபனை இல்லாத சான்றிதழும் தேவை. மேலும், தொல்லியல் துறைக்குச் சொந்தமான நினைவுச்சின்னங்களிலிருந்து 300 மீட்டா் சுற்றளவில் உள்ள கட்டடங்களுக்கு, தேசிய நினைவுச்சின்ன ஆணையத்தின் சான்றிதழ் தேவை. அதிக எண்ணிக்கையிலான கோபுரங்கள் தவிா்க்கப்பட வேண்டும். மேலும், தற்போதுள்ள கோபுரங்களைப் பயன்படுத்துவதற்கு குறைந்தபட்சம் மூன்று ஆபரேட்டா்களுக்கு இடமளிக்க வேண்டும். அதற்காக வழிகாட்டுதல்களின்படி அவ்வப்போது மத்திய அரசு கொள்கையில் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது என்று ஆவணம் கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.