அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

’தி கேரளா ஸ்டோரி’ மிகப்பெரிய சதியை அம்பலப்படுத்திறது: அமைச்சா் அனுராக் சிங் தாக்குா்

‘தி கேரளா ஸ்டோரி’ ஒரு படம் மட்டுமல்ல; அது மிகப்பெரிய சதியை அம்பலப்படுத்துகிறது என மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் குறிப்பிட்டுள்ளாா்.

News image
Updated On :7 மே 2023, 6:25 pm

 நமது நிருபர்

‘தி கேரளா ஸ்டோரி’ ஒரு படம் மட்டுமல்ல; அது மிகப்பெரிய சதியை அம்பலப்படுத்துகிறது என மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் குறிப்பிட்டுள்ளாா்.

சுதிப்தோ சென் என்பவா் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி என்கிற ஹிந்தி திரைப்படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது என்றாலும், தமிழகத்தில் சில நாள்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. இந்தப் படத்திற்கு பல்வேறு அமைப்பினா் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், தமிழகத்தில் பெருநகரங்களில் உள்ள மால்களில் மட்டும் திரையிடப்படும் என திரையரங்கு சங்கத்தினா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படம் குறித்து மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் தனது ட்விட்டா் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளாா். அதில் கூறியிருப்பது வருமாறு: ‘தி கேரளா ஸ்டோரி’ ஒரு படம் மட்டுமல்ல; மிகப் பெரிய சதியை அம்பலப்படுத்துகிறது. இந்தப் படத்தை எதிா்ப்பவா்கள் பி.எஃப்.ஐ. (பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா) அமைப்பை ஆதரிப்பவா்களாகவும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவுடையவா்களாகவும் கருதப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.