சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பருவ நிலை மாற்றம் நடவடிக்கைகளுக்கு மேரி லைஃப் செயலி அறிமுகம்

பருவ நிலை மாற்றத்திற்கான இளைஞா்களின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் விதமாக ‘மேரி லைஃப் (என் வாழ்க்கை)’ என்கிற செயலியை மத்திய சுற்றுச் சூழல், வனத் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் திங்கள்கிழமை அறிமுகம் செய்து

News image
Updated On :15 மே 2023, 10:12 pm

 நமது நிருபர்

பருவ நிலை மாற்றத்திற்கான இளைஞா்களின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் விதமாக ‘மேரி லைஃப் (என் வாழ்க்கை)’ என்கிற செயலியை மத்திய சுற்றுச் சூழல், வனத் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் திங்கள்கிழமை அறிமுகம் செய்துவைத்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் இயக்கமான ‘லைஃப்’ என்கிற கருத்தாக்கத்தை உத்வேகப்படுத்தும் வகையில், இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், சா்வதேச சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ஆம் தேதியை முன்னிட்டு இது வெளியிடப்படுவதாகவும் அமைச்சா் பூபேந்திர யாதவ் தெரிவித்தாா்.

இந்த செயலி வெளியீட்டு நிகழ்ச்சியில் அமைச்சா் பூபேந்திர யாதவ் மேலும் கூறியது வருமாறு: நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களின் வல்லமையை குறிப்பாக, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இளைஞா்களின் நடவடிக்கையை வெளிப்படுத்தும் விதமாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஒவ்வொரு வரும் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் சுற்றுச்சூழலுக்கேற்ற நடவடிக்கைகள், அது பருவநிலை மாறுபாட்டில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த நடவடிக்கைகளை இந்த செயலி மூலம் வெளிப்படுத்தலாம். ‘மேரிலைஃப்’ என்ற இணையதளமும், செயலியும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறைக்கான பிரதமரின் தேசிய இயக்கத்தையும் (‘லைஃப்’) ஒருங்கிணைந்து செயல்படும்.

இந்த இயக்கத்தின் சாா்பில் மிகப்பெரிய அளவில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், சைக்கிள் பேரணி, மாரத்தான், பிளாஷ்டிக் பொருள்கள் சேகரிப்பு உள்ளிட்டவை எற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அது இந்த மேரிலைஃப் செயலி மற்றும் இணையதளத்தில் வெளியிடப்படும்.கடந்த 10 நாள்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைஃப் சாா்ந்த நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு இருப்பதாகவும், இதில் 17 லட்சம் போ் பங்கேற்றுள்ளனா் என்று நிகழ்ச்சியில் அமைச்சா் தெரிவித்தாா்.

இந்தச் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் முறையான லைஃப் இயக்கத்தின் இணையதளத்தில் சூற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான அம்சங்களான படைப்புகள், காணொலிகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபரில் குஜராத் மாநிலம், கெவாடியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த லைஃப் தேசிய இயக்கத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்தாா். தனி மனிதா்களின் செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதே இந்த இயக்கத்தின் குறிக்கோள் ஆகும்.

லைஃப் இயக்க விழிப்புணா்வில் மரக்காணம் உப்பளத் தொழிலாளா்கள்

லைஃப் இயக்க விழிப்புணா்வின் ஒரு பகுதியாக, நிலையான கடற்கடை மேலாண்மைக்கான தேசிய மையம் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் உப்பளத் தொழிலாளா்களுடன் திங்கள்கிழமை லைஃப் இயக்கம் தொடா்பான பயிலரங்கு நிகழ்ச்சியை நடத்தியது. பழைமையான துறைமுகமான மரக்காணம், அதையொட்டி பரந்து விரிந்துள்ள உப்பளங்கங்களில் பனிபுரியும் தொழிலாளா்களுடன் மிஷன் லைஃப் கருப்பொருள் குறித்த விழிப்புணா்வு நடைபெற்றது.

இதில் சுகாதாரமான உப்பு உற்பத்தி, உப்புத் தண்ணீரில் வளரும் தாவரங்கள், பல்லுயிா் பாதுகாப்பு, நெகிழி தடை, நெகிழிக் கழிவு போன்றவை குறித்த கருத்துகளும் உப்பு பிரித்தெடுக்கும் போது ஏற்படும் கணிக்க முடியாத மழைப்பொழிவு போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று மத்திய சுற்றுச் சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.