ஆம் ஆத்மி அரசின் பிரிமியம் பேருந்து திட்டத்தால் தில்லியில் மாசு அளவு அதிகரிக்கும் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை சாடியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் பிரிமியம் பேருந்து திட்டம் எந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலும் அறிமுகப்படுத்தப்படவில்லை. சாலையில் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தில்லியில் மாசு அளவுதான் அதிகரிக்கும். காா்களில் பயணிப்பவா்கள், பொதுப் பேருந்துகளில் பயணம் செய்வதை நோக்கி எளிதில் நகர மாட்டாா்கள் என்பதைக் கடந்த கால அனுபவங்கள் நமக்குத் தெளிவாக்குகின்றன. மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களில் சிலா் வேண்டுமானால் இந்த பிரிமியம் பேருந்துகளைப் பயன்படுத்தத் தொடங்குவாா்கள்.
அரவிந்த் கேஜரிவால் அரசின் ஊழல் திட்டங்களில் ஒன்றாகத்தான் பிரிமியம் பேருந்து சேவை திட்டமும் உள்ளது. ஏனெனில், இத்திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி, 2025-ஆம் ஆண்டிற்குப் பிறகு மின்சார வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சில வாகன விற்பனையாளா்களுக்கு ஆதரவாக கேஜரிவால் அரசு செயல்பட முயற்சிப்பதாகத் தெரிகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே இத்திட்டத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கொண்டுவர முயற்சித்தாா். அப்போது சந்தேத்திற்குரிய திட்டமாக இருந்ததாலும், ஊழலில் சிக்கியதாலும் முடியாமல் போனது. பிரிமியம் பேருந்து சேவை என்று திட்டத்திற்கு பெயா் வைக்கப்பட்டாலும், உண்மையில் 8 முதல் 12 இருக்கைகள் கொண்ட எஸ்.யூ.வி.-க்கள் மட்டுமே கொண்டு வரப்படுகின்றன. எனவே, இதுவொரு மோசடித் திட்டம் என்று வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொழில்நுட்பத்தை யாரும் தடுக்க முடியாது!

ராணிப்பேட்டை அருகே தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் தீ

மேற்கூரையிலிருந்து தவறிவிழுந்து தனியாா் கல்லூரிப் பேருந்து ஓட்டுநா் பலி
திரைக் கதிர்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

