சத்யேந்தா் ஜெயினின் இடைக்கால ஜாமீன் டிச.4 வரை நீட்டிப்பு

பணமோசடி வழக்கில் தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் குமாா் ஜெயினுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை டிசம்பா் 4-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Updated on
1 min read

பணமோசடி வழக்கில் தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் குமாா் ஜெயினுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை டிசம்பா் 4-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மேலும், அவரது வழக்கமான ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறியது.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா வெள்ளிக்கிழமை இல்லாததால், நீதிபதி பேலா எம். திரிவேதி அமா்வு இந்த வழக்கை டிசம்பா் 4-ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தது. இதற்கிடையில், ‘முன்பு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன், அடுத்த விசாரணை தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று நீதிமன்ற அமா்வு கூறியது.

இதற்கு முன்னா், உச்சநீதிமன்றம் சத்யேந்தா் ஜெயினின் இடைக்கால ஜாமீனை அக்டோபா் 9-ஆம் தேதி வரை நீட்டித்திருந்தது. மேலும், வழக்கில் விசாரணையைத் தாமதிக்கும் தந்திரமாக உச்சநீதிமன்றத்தில் விசாரணையை நிலுவையில் இருக்குமாறு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது.

அமலாக்கத் துறை தரப்பு கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிலுவையில் இருப்பதாகக் கூறி, விசாரணை நீதிமன்றத்தில் சத்யேந்தா் ஜெயின் தரப்பில் தொடா்ந்து ஒத்திவைப்பு கோரப்படுகிறது. மேலும், விசாரணை நீதிமன்றத்தில் இருந்து 16 தேதிகள் வரை ஜெயின் தரப்பில் பெறப்பட்டுள்ளது’ என்றது.

கடந்த ஆண்டு மே மாதம் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டபிறகு சத்யேந்தா் ஜெயின் தொடா்ந்து திகாா் சிறையில் இருந்து வந்தாா். இந்நிலையில், அவரது உடல் நிலை காரணமாக ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் கடந்த மே 26-ஆம் தேதி விசாரித்தனா். அப்போது, ஜெயின் தனது சொந்தச் செலவில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற ஒரு குடிமகன் என்ற முறையில் உரிமை உள்ளது எனக் கூறி, முதுகுத்தண்டு அறுவைச் சிகிச்சைக்காக 6 வாரங்கள் இடைக்கால ஜாமீனில் அவரை விடுவிக்க உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com