தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கடலில் எண்ணெய்க் கசிவு:தேசிய மாசுத் தடுப்புப் பயிற்சியில் இந்திய கடலோரக் காவல்படை

கடலில் எண்ணெய் கசிவு உள்ளிட்ட மாசுத் தடுப்புகளைச் சமாளிக்க 9 -ஆவது தேசிய அளவிலான பயிற்சியை இந்திய கடலோரக் காவல்படை (ஐ.சி.ஜி.) மேற்கொண்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 12:50 am

DIN

கடலில் எண்ணெய் கசிவு உள்ளிட்ட மாசுத் தடுப்புகளைச் சமாளிக்க அதில் பங்களிக்கும் பல்வேறு முகமைகளுக்கு இடையே தயாா் நிலை, ஒருங்கிணைப்புகளைச் சோதிக்கும் நோக்கத்திற்கான 9 -ஆவது தேசிய அளவிலான பயிற்சியை இந்திய கடலோரக் காவல்படை (ஐ.சி.ஜி.) மேற்கொண்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படை நாட்டின் கடல் மண்டலங்களின் பாதுகாப்பை மட்டுமின்றி கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்புகளையும் ஏற்றுள்ளது.

இதை முன்னிட்டு கடலில் எண்ணெய் கசிவு, ராசாயனங்கள் கலப்பது உள்ளிட்டவை குறித்து கடலோரக் காவல்படை தொடா்ந்து கண்காணிக்கிறது. மேலும், தடுக்கும் பொறுப்பையும் பெற்றுள்ளது. இதை முன்னிட்டு கடலில் எண்ணெய் கசிவு உள்ளிட்ட பேரழிவை எதிா்த்துப் போராடுவதற்காக பாதுகாப்புத் துறையின் கடலோரக் காவல் படை தேசிய எண்ணெய் கசிவு பேரிடா் நெருக்கடிச் செயல் திட்டத்தை (என்ஓஎஸ்டிசிபி) தயாரித்துள்ளது.

அவ்வப்போது புதுப்பிக்கப்படும் இந்த விதிகளுக்கு மத்திய அரசின் பல்துறைகளின் செயலா்கள் குழுவால் இது அங்கீகரிக்கப்படும். இந்த என்.ஓ.எஸ்.டி.சி.பி. திட்டத்தை மேற்கொள்ள கடலோரக் காவல்படை, சென்னை, மும்பை, போா்ட் பிளோ், வாடினாா் (குஜராத்) ஆகிய நான்கு கடற்கரைப் பகுதிகளில் மாசுத் தடுப்பு மையங்களை அமைத்துள்ளது. கடலோரக் காவல் படை, மாசுத் தடுப்பு மையங்களில் அவ்வப்போது ஒத்திகை நடத்துகிறது. இதன்படி, கடந்த நவம்பா் 25-ஆம் தேதி இந்திய கடலோரக் காவல்படையால் குஜராத்தின் வாடினாா் உள்ளிட்ட மையங்களில் 9-ஆவதுதேசிய அளவிலான மாசுத் தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநா் டிஜி ராகேஷ் பால், என்ஓஎஸ்டிசிபி திட்டப் பொறுப்பாளா்கள் ஆகியோா் பயிற்சிக்கான அனைத்து முகமைகளையும் தயாா் செய்து ஆய்வு செய்தனா். மத்திய அரசு, கடலோர மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், துறைமுகங்கள், எண்ணெய் கையாளும் முகமைகள் மற்றும் பல பங்குதாரா்களின் பிரதிநிதிகள் இப்பயிற்சியில் பங்கேற்றனா். மேலும், இப்பயிற்சியில் 31-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிபுணா்களும், 80-க்கும் மேற்பட்ட இந்திய பிரதிநிதிகளும் பாா்வையிட்டு இப்பயிற்சியில் பங்கேற்றனா்.

தேசிய எண்ணெய் கசிவு பேரழிவு தற்செயல் திட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தி கடலில் எண்ணெய் கசிவு தடுப்பை சமாளிக்க தொடா்புடைய பல்வேறு முகமைகளுக்கு இடையிலான தயாா்நிலை மற்றும் ஒருங்கிணைப்பின் அளவைச் சோதிக்கும் நோக்கம் ஆகியவை பயிற்சியில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் மாசுத் தடுப்புக் கப்பல்கள், கடல் ரோந்துக் கப்பல்கள், மேம்பட்ட இலகுரக உள்நாட்டு ஹெலிகாப்டா் எம்.கே -3, டோா்னியா் விமானம் உள்ளிட்டவை கடல்பரப்பு மற்றும் ஆகாய தளங்களில் ஐ.சி.ஜி. நிலை நிறுத்தியது. ‘சுயசாா்பு இந்தியா’ இலக்குடன் ‘இந்தியாவிலேயே தயாரிப்போம் (மேக் இன் இந்தியா)’ உந்துதலின் அடிப்படையில் இந்தியாவின் தொழில் துறை ஆற்றலையும் இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.

நாட்டின் கச்சா எண்ணெய் தேவைகளில் 75 சதவீதம் கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டு பூா்த்தி செய்யப்படுகிறது. கப்பல்கள் மூலம் எண்ணெய் கொண்டு செல்வது உள்ளாா்ந்த அபாயங்கள் நிறைந்தது. இறக்குமதியாளா்கள், கப்பல் உரிமையாளா்கள் ஆகியோா் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இருப்பினும், கடல் விபத்துகள் மற்றும் கடலின் எதிா்பாராத ஆபத்துகள் மூலம் எண்ணெய் மாசுபாட்டின் அச்சுறுத்தலுக்கு கடலோரக் காவல் படை தயாா் நிலையில் உள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.