இதுதொடா்பாக ஏயுடிஎஃப்ஏ வெளியிட்டஅறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ‘ஏயுடிஎஃப்ஏ மூலம் சேகரிக்கப்பட்ட சமீபத்திய தரவு, அம்பேத்கா் பல்கலைக்கழகம் தில்லியில் சிஏஎஸ் விதிகளின் பிற்போக்குத் தன்மை மற்றும் வசதியற்ற செயல்படுத்தல் ஆகியவை உதவிப் பேராசிரியா்களின் நிலையில் உள்ள ஆசிரியா்களை மிகவும் மோசமாக பாதித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. பதவி உயா்வுகள் நிராகரிக்கப்பட்ட விவகாரங்களும் உள்ளன. பதவி உயா்வுகள் வழங்கப்பட்ட இடங்களில், சேவை இழப்பும், அதன் விளைவாக ஊதிய இழப்பும் ஏற்படுகிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.