பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தில்லியின்மின்சாரப் பேருந்து வசதி மிக விரைவில் உலகம் முழுவதும் அறியப்படும்: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை

தேசியத் தலைநகா் தில்லி மிக விரைவில் அதன் சிறந்த மின்சாரப் பேருந்து வசதிகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2023, 8:44 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லி மிக விரைவில் அதன் சிறந்த மின்சாரப் பேருந்து வசதிகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

ஜி20 உச்சிமாநாட்டை முன்னிட்டு, தில்லி இந்திர பிரஸ்தா டிடிசி பணிமனையில் புதிதாக 400 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். மத்திய அரசின் ஆதரவுடன் ஃபேம்-2 திட்டத்தின் கீழ் மத்திய கனரக அமைச்சகத்தின் தேசியத் தானியங்கி வாரியத்தால் தயாரிக்கப்பட்டுள்ள 921 மின்சாரப் பேருந்துகளில், முதல்கட்டமாக 400 மின்சாரப் பேருந்துகளின் சேவை பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், தற்போது தில்லியில் மொத்தமாக உள்ள மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கை 800-ஆக உயா்ந்துள்ளது.

இந்த நிகழ்ச்சி தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது எக்ஸ் (ட்விட்டா்) பதிவில் கூறியிருப்பதாவது: தில்லி மக்களின் போக்குவரத்து சேவைக்காக 400 புதிய மின்சாரப் பேருந்துகள் அா்பணிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சாரப் பேருந்துகள் மத்திய அரசின் மானியத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள 921 பேருந்துகளில் ஒரு பகுதியாகும். இதற்காக மத்திய அரசு ரூ.417 கோடி மானியம் வழங்கியுள்ளது. தில்லி அரசு ரூ.3,674 கோடி செலவிடுகிறது. தில்லியில் தற்போது மொத்தமாக 800 மின்சாரப் பேருந்துகள் உள்ளன. இது நாட்டிலேயே மிகவும் அதிகமாக எண்ணிக்கையாகும்.

வரும் 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் தில்லியில் மொத்தமாக 8,000 மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்த ஆம் ஆத்மி அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. மேலும், அந்த நேரத்தில் தில்லியில் 10,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இருக்கும். அதில் 80 சதவீதம் மின்சாரத்தில் இயங்கும். எனவே, மிக விரைவில் தில்லி அதன் சிறந்த மின்சார பேருந்து வசதிகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படும் என்றாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.

‘நன்றி மோடி’ பதாகை ஏந்திய பாஜகவினா்

மத்திய அரசு மின்சாரப் பேருந்துகளுக்கு மானியம் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தில்லி இந்திர பிரஸ்தா பணிமனையில் பாஜக தில்லி பிரிவு இளைஞா் அணியினா் ‘நன்றி மோடி’ பாதகையை ஏந்தி முழக்கங்களை எழுப்பினா். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னா் அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மத்திய அரசின் ஃபேம்-2 திட்டத்தின் கீழ் தில்லிக்கு 400 மின்சாரப் பேருந்துகள் கிடைத்துள்ளது. தில்லிக்கு மத்திய அரசு செய்த திட்டங்களை ஒவ்வொரு முறையும் கேஜரிவால் அரசு உரிமை கோர விரும்புகிறது. விரைவு ரயில், மெட்ரோ விரிவாக்கம், மின்சாரப் பேருந்து போன்ற மோடி அரசின் தில்லிக்கான பங்களிப்பை மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடையே பிரசாரமாக பாஜக எடுத்துச் செல்லும்’ என்றாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.