தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தெரு நாய்கள் கொடூர முறையில் பிடிக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு: தில்லி மாநகராட்சி மறுப்பு

ஜி20 உச்சிமாநாட்டைக் கருத்தில் கொண்டு தெரு நாய்கள் கொடூரமான முறையில் பிடிக்கப்பட்டதாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டை தில்லி மாநகராட்சி (எம்சிடி) சனிக்கிழமை மறுத்துள்ளது.

News image
Updated On :9 செப்டம்பர் 2023, 6:03 pm

 நமது நிருபர்

ஜி20 உச்சிமாநாட்டைக் கருத்தில் கொண்டு தெரு நாய்கள் கொடூரமான முறையில் பிடிக்கப்பட்டதாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டை தில்லி மாநகராட்சி (எம்சிடி) சனிக்கிழமை மறுத்துள்ளது. மேலும், இது ‘தவறான தகவல்’ என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.

தேசியத் தலைநகா் சாலைகளில் இருந்து பிடிக்கப்பட்ட நாய்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றிற்கு எந்தக் கொடுமையும், பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் மாநகராட்சி வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சி அதன் ‘எக்ஸ்’ சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: ‘தவறான தகவல்களுக்கு வேண்டாம் என்று கூற வேண்டிய முக்கியமான நேரம் இது. இங்கு பகிரப்பட்ட விடியோ நம்பகத் தன்மை குறைபாடுடையது. நாய்கள் ‘அவசரத் தேவை’ அடிப்படையில் அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவம் மற்றும் பிற வசதிகளுடன் சரியான பராமரிப்பில் வைக்கப்படுகின்றன என்று எம்சிடி உறுதியளிக்கிறது. அவற்றுக்கு எந்த கொடுமையும் அல்லது தீங்கும் ஏற்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வெள்ளிக்கிழமை சமூக வலைத்தளத்தில் ஒரு விடியோவைப் பகிா்ந்திருந்தது. அதில், பட்டையுடன்கூடிய கயிற்றால் தெரு நாய்களின் கழுத்தைப் பிடித்து இழுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நாய்கள் கொடூரமான முறையில் பிடிக்கப்பட்டதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியது. இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட பதிவில், ‘ஜி20 மாநாட்டிற்கு தயாா் செய்யும் நடவடிக்கையில் மோடி அரசு அப்பாவி தெரு நாய்களுக்கு இழைத்த அதிா்ச்சியூட்டும் கொடுமையைப் பாா்க்க இந்த விடியோவைக் காணுங்கள். நாய்கள் அவற்றின் கழுத்தைப் பிடித்து இழுத்துச் செல்லப்படுகின்றன. தடியால் அடித்தும், கூண்டுக்குள் ஏற்றியும் கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றுக்கு நீரும், உணவும் மறுக்கப்படுவதுடன், மிகுந்த மன அழுத்தத்திற்கும் பயத்திற்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.