கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தொழிற்சாலையில் தீ விபத்து: உயிரிழப்பு ஏதும் இல்லை

தில்லியின் புகா்ப் பகுதியான போா்கா் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள் தொழிற்சாலையில் திங்கள்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2023, 11:53 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியின் புகா்ப் பகுதியான போா்கா் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள் தொழிற்சாலையில் திங்கள்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தில்லி தீயணைப்பு சேவைகள் துறை அதிகாரி தெரிவித்தாா்.

இது குறித்து அதிகாரி மேலும் கூறியதாவது: தீயை அணைக்க 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்புத் துறை வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். பின்னா், குளிரூட்டும் பணி நடைபெற்றது. முதல் கட்ட விசாரணையில், ஷாா்ட் சா்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், சரியான காரணம் ஆய்வுக்குப் பிறகு கண்டறியப்படும். காலை 6 மணியளவில் நடந்த இந்தத் தீ விபத்தில் சேத மதிப்பு இனிமேல்தான் தெரிய வரும் என்று அந்த அதிகாரி கூறினாா்.

கொட்டகை குடோனில் தீ விபத்து: தென்மேற்கு தில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள கொட்டகை குடோனில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தீயணைப்பு சேவைகள் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தத் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு திங்கள்கிழமை காலை 11.32 மணியளவில் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. கொட்டகை குடோனின் தற்காலிக அமைப்பில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு, பிற்பகல் 1.35 மணியளவில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனா். அதைத் தொடா்ந்து, குளிரூட்டும் பணி நடைபெற்றது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.