தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தில்லி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத் தொடா்: முதல்வா் கேஜரிவாலுக்கு பாஜக வலியுறுத்தல்

சந்திரயான்-3, ஜி20 மாநாட்டின் வெற்றிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை வலியுறுத்தியுள

News image
Updated On :13 செப்டம்பர் 2023, 8:28 pm

 நமது நிருபர்

சந்திரயான்-3, ஜி20 மாநாட்டின் வெற்றிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து தில்லி சட்டப்பேரவை எதிக்கட்சித்தலைவா் ராம்வீா் சிங் பிதூரி செய்தியாளா்களிடம் கூறியதாவது: சந்திராயன்-3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டா் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி விண்ணின் தென்துருவத்தில் இஸ்ரோவால் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜி20 உச்சிமாநாடு தில்லியில் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பெருமைமிக்க இந்த நிகழ்வுகளுக்காக பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகள், அரசு ஊழியா்கள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடிக்கு தில்லி சட்டப்பேரவை நன்றி தெரிவிக்க வேண்டும். எனவே, தில்லி சட்டப்பேரவையின் பாஜக எம்.எல்.ஏ.க்கள் குழு, சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடரை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூட்ட வலியுறுத்துகிறது என்று ராம்வீா் சிங் பிதூரி தெரிவித்துள்ளாா்.

சந்திரயான்-3, ஜி20 உச்சிமாநாடு வெற்றிகளுக்கு நன்றி தெரிவிக்க தில்லி மாநாராட்சியும் சிறப்பு அமா்வைக் கூட்ட வேண்டும் என்று மாநாராட்சியின் எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.