தில்லி அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இன்றி இறக்கும் மக்கள்! சுவாதி மாலிவால்

தில்லி அரசை ஆம் ஆத்மி எம்பி சுவாதி மாலிவால் விமர்சித்திருப்பது பற்றி...
சுவாதி மாலிவால்
சுவாதி மாலிவால்
Published on
Updated on
1 min read

தில்லி அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லாமல் சிகிச்சை கிடைக்காமல் மக்கள் இறந்து கொண்டிருப்பதாக ஆம் ஆத்மி எம்பி சுவாதி மாலிவால் விமர்சித்துள்ளார்.

அரவிந்த் கேஜரிவாலின் வீட்டில் அவரின் உதவியாளரால் தாக்கப்பட்டதாக புகார் அளித்த சுவாதி மாலிவால், தொடர்ந்து ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வருகின்றார்.

ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சுவாதி மாலிவால், அக்கட்சிக்கு தலைமையிலான தில்லி அரசுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“தில்லி அரசு மருத்துவமனைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சரியான சிகிச்சை இல்லாமல், மருந்துகள் கிடைக்காமல் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

போலியான மருத்துவ அட்டைகளை விநியோகிப்பதன் மூலம் பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள். தில்லியில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளின் நிலையைப் பார்த்துவிட்டு திரும்பியுள்ளேன். போலியான சுகாதாரப் புரட்சியை அம்பலப்படுத்துகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

மற்றொரு பதிவில் தில்லி புற்றுநோய் மருத்துவமனையில் காட்சிகளை பகிர்ந்து பதிவிட்டிருப்பதாவது:

“இதுதான் தில்லியின் உலகத் தர வாய்ந்த சுகாதார மாதிரி. புற்றுநோயால் பாதிக்கப்படவர்கள் கடுமையான குளிரில் சாலைகளில் சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள்.

நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள் கதவுகள் திறக்கப்பட்டதும் தள்ளுமுள்ளுக்கு இடையே உள்ளே செல்கிறார்கள். ஆனால், கவுன்ட்டர்களில் மருந்துகள் கிடையாது.

புற்றுநோயாளிகளுக்கு பரிசோதனை எடுப்பதற்கான தேதிகள் சில நாள்களுக்கு பின்பே அளிக்கப்படுகிறது. ஒரே படுக்கையில் 3 - 4 நோயாளிகள் உள்ளனர்.

மருத்துவமனை சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், கரப்பான்பூச்சிகள் உலாவுவதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர்.

வீடு வீடாகச் சென்று போலியான மருத்துவ உத்தரவாத அட்டைகளை வழங்குபவர்கள், தங்களின் அரண்மனையில் இருந்து வெளியேறி ஏழை மக்களின் நிலையை பார்த்திருக்கிறீர்களா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com