குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த காவல் துறை தலைவர் லலிதா லட்சுமி, கமாண்டன்ட் ராஜசேகர், உதவி ஆய்வாளர் ராயப்பன் ஆகியோருக்கு தகைசால் பணிக்கான குடியரசு தலைவர் பதக்கமும், ஐ.ஜிக்கள் லோகநாதன், நரேந்திரன் நாயர், ரூபேஷ் மீனா உள்பட 21 பேருக்கு மெச்சத்தக்க பணிக்கான பதக்கமும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நாடு முழுவதும் மத்திய, மாநில காவல் துறைகள், தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்புத் துறை, சிறைத் துறையைச் சேர்ந்த மொத்தம் 1,132 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காவல் பணியில் மிகவும் உயரிய விருதாகக் கருப்படும் வீர, தீர செயலுக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் ஐக்கிய நாடுகள் அமைதிப் படையில் பணியாற்றி உயிர்நீத்த இரு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75 - ஆவது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) நாடு முழுவதும் கொண்டப்படவுள்ளது. இதையொட்டி நாட்டின் காவல் பணியில் ஈடுபடும் மத்திய, மாநில காவல் துறைகள், தீயணைப்புத்துறை உள்ளிட்டவற்றில் சிறப்பாக பணியாற்றுவோருக்கான விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் விவரம்:
வீர, தீர செயலுக்கான குடியரசுத் தலைவர் பதக்கம்: எல்லை பாதுகாப்புப் படையைச் (பிஎஸ்எஃப்) சேர்ந்த தலைமைக் காவலர்கள் ஷிஷுபால் சிங், ஷன்வலா ராம் வைஷ்ணவ் ஆகிய இருவர் ஐ.நா அமைதிப் படையில் காங்கோ நாட்டில் நடந்த வன்முறையை அடக்கும் பணியில் ஈடுபட்டபோது உயிர்நீத்தனர். இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது உயர் தியாகத்தை கெüரவிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் வீர, தீர செயலுக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீரச்செயல் பதக்கம்: இந்தப் பட்டியலில் மாநில காவல் துறையினர் மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளைச் சேர்ந்த 275 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்த 72 பேர், மகாராஷ்டிர காவல் துறையைச் சேர்ந்த 18 பேர், சத்தீஸ்கர் காவல் துறையைச் சேர்ந்த 26 பேர், ஜார்க்கண்ட் காவல் துறையைச் சேர்ந்த 23 பேர், ஒடிஸாவைச் சேர்ந்த 15 பேர், தில்லி காவல்துறையைச் சேர்ந்த 8 பேர், மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 65 பேர், எல்லை ஆயுதப் படையை (எஸ்எஸ்பி) சேர்ந்த 21 பேர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
சிறப்புப் பணி சேவை: குடியரசுத் தலைவரின் சிறப்புப் பணி அல்லது தகைசால் பணிக்கான பதக்கம் மத்திய ஆயுத காவல் படைகள் (39) மாநில காவல் துறையினர் (55) மற்றும் தீயணைப்புத்துறை (1), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (4), ஊர்க்காவல் குடிமைப் பாதுகாப்பு (4) என 102 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளான ஆர்.லலிதா லட்சுமி (ஐ.ஜி), எஸ். ராஜசேகரன் (கமாண்டன்ட்), உதவி ஆய்வாளர் ஆர்.ராயப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மெச்சத்தக்க சேவை: இந்த வரிசையில் 753 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சி.ஆர்.பி.எஃப் (57), பிஎஸ்எஃப் (46) போன்ற மத்திய படைகளும், உத்தர பிரதேசம்(74), மகாராஷ்டிரம் (40) உள்ளிட்ட மாநில காவல் துறைகளைச் சேர்ந்தவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். தமிழக காவல் துறையில் பணியாற்றும் 21 பேருக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த இருவருக்கும் இந்தப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விவரம் வருமாறு: ஜ.ஜி.க்கள் ஜெ. லோகநாதன், கே.எஸ். நரேந்திரன் நாயர், ரூபேஷ் குமார் மீனா, துணைக் கண்காணிப்பாளர் க. அண்ணாதுரை, காவல் ஆய்வாளர்கள் டாக்டர் லோகநாதன், செ. செங்குட்டுவன், மா. தேவேந்திரன், அ. மணி, உதவி ஆய்வாளர்கள் செ. செல்லதுரை, கோ. ராஜகோபால், உதவி படைத் தலைவர் சீ. அழகுதுரை, ஆர்.எம். பழனிவேலு, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் க. மோகன்பாபு, க. வெங்கடேசன், ஐ. ராயமுத்து, பி.ஆர். அனில் குமார், நா. ஈஸ்வரன், கோ. சாலமோன் ராஜா, என்.வி.எம். அருள்முருகன், ஆ.குணசேகரன், லெ. சுந்தரம், சீ. வெங்கடேசன் ஆகிய 21 பேர் மெச்சத்தக்க சேவைக்கான விருதுகளைப் பெறுகின்றனர். புதுச்சேரியைச் சேர்ந்த அனிதா ராய் (சீனியர் எஸ்பி), வைர வல்லபாணே (எஸ்பி) ஆகிய இருவருக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


