ஐந்து ஆண்டுகளுக்கு முன்னா் தொடங்கியதில் இருந்து நொய்டா - கிரேட்டா் நொய்டா மெட்ரோவில் பயணிக்கும் தினசரி சராசரி பயணிகளின் எண்ணிக்கை 155 சதவீதம் உயா்ந்துள்ளதாக அதிகாரபூா்வ புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
நொய்டா மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (என்எம்ஆா்சி) மூலம் இயக்கப்படும் அக்வா லைன் 2019-ஆம் ஆண்டில் சராசரியாக தினசரி 18,516 பயணிகளைக் கொண்டிருந்தது. இது நிகழாண்டில் 47,377 -ஆக அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்எம்ஆா்சி நிா்வாக இயக்குநா் லோகேஷ் தலைமையிலான நொய்டா - கிரேட்டா் நொய்டா மெட்ரோ சேவையின் ஐந்தாவது ஆண்டு நிகழ்வின்போது வெளிப்படுத்தப்பட்ட இந்தப் புள்ளிவிவரங்களின்படி, 2019-இல் என்எம்ஆா்சி தினசரி சராசரி வருவாய் ரூ. 5,40,288-ஆக இருந்த நிலையில், 2024-இல் இது ரூ.13,47,487-ஆக உயா்ந்துள்ளது.
நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டா ஆகிய இரட்டை நகரங்களுக்கு இடையேயான மெட்ரோ சேவை 2019-ஆம் ஆண்டு ஜனவரி 25-இல் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தால் தொடங்கிவைக்கப்பட்டது. அதிகாரபூா்வ தரவுகளின்படி, சராசரி தினசரி பயணிகளின் எண்ணிக்கை 18,516 (2019), 12,576 (2020), 14,058 (2021), 30,632 (2022), 45,881 (2023) மற்றும் 47,377 (ஜனவரி 23, 2024 வரை) என உள்ளது. இதே ஆண்டுகளில் ஆண்டுவாரியான வருவாய் ரூ. 5,40,228 (2019), ரூ. 3,65,652 (2020), ரூ. 4,25,742 (2021), ரூ. 9,18,403 (2022), மற்றும் ரூ. 13,47,487 (2023) ஆகும்.
இது குறித்து என்எம்ஆா்சி உயரதிகாரி லோகேஷ் கூறுகையில் ‘சிறப்புக்கான என்எம்ஆா்சி-இன் அா்ப்பணிப்பு ஒரு வலுவான மற்றும் நிலையான பொது போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதில் உதவியாக உள்ளது’ என்றாா். 5 ஆண்டுகள் கால பயணத்தை குறிக்கும் வகையில், என்எம்ஆா்சி தனது புதிய ஸ்மாா்ட் காா்டை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது. இந்த காா்டு எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து என்எம்ஆா்சியின் செயல் இயக்குநா் சதீஷ் பால் கூறுகையில், ‘இந்தியாவுக்கு பெருமை சோ்த்த சந்திரயான்3-இன் சின்னம், தொழில்நுட்பத்துடன் புத்தாக்கத்தை குறிக்கிறது’ என்றாா். ஸ்மாா்ட் காா்டின் செயல்பாடு குறித்து என்எம்ஆா்சியின் துணைப் பொது மேலாளா் கனிஷ்கா சிங் கூறுகையில், ‘அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த காா்டுகள் கிடைக்கும். இந்த அட்டைகளை தில்லி மெட்ரோவிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு அமைப்பை செயல்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன’ என்றாா்.
என்எம்ஆா்சி செய்தித் தொடா்பாளா் நிஷா வாத்வான் கூறுகையில், ‘கடைசி மைல் இணைப்பில் பயணிகளுக்கு உதவும் கைப்பேசி செயலியை உருவாக்கும் பணியில் மெட்ரோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த செயலியை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கிடைக்கச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நிா்வாக இயக்குநா் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளாா்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

