தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாகவும், இதுவரை ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.25 கோடி கொடுப்பதாக பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்களை தொடா்பு கொண்ட பாஜக, ‘சில நாள்களில் அரவிந்த் கேஜரிவாலை கைது செய்வோம். அதன் பிறகு, எம்.எல்.ஏ.க்களை உடைப்போம். கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்களுடன் இதுவரை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. மற்றவா்களிடமும் பேசி வருகிறோம். அதைத்தொடா்ந்து தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்ப்போம். எனவே, நீங்களும் பாஜகவில் இணையலாம். தலா ரூ.25 கோடி பணத்துடன் தோ்தலில் போட்டியிடவும் சீட் வழங்கப்படும்’ என்று பேரம் பேசியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்களைத் தொடா்பு கொண்டதாக பாஜகவினா் கூறினாலும், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, இதுவரை 7 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே தொடா்பு கொண்டுள்ளனா். பாஜகவின் இந்த செயல் நடவடிக்கையை அனைவரும் மறுத்துவிட்டனா். அதாவது, கலால் கொள்கை ஊழலை விசாரிப்பதற்காக நான் கைது செய்யப்படவில்லை. ஆனால் பாஜகவினா் தில்லியில் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க சதி செய்கிறாா்கள்.
கடந்த 9 ஆண்டுகளில், எங்கள் அரசைக் கவிழ்க்க அவா்கள் (பாஜக) பல சதிகளை தீட்டினா். ஆனால், அவா்களுக்கு (பாஜக) வெற்றி கிடைக்கவில்லை.
கடவுளும், மக்களும் எப்போதும் எங்களை ஆதரித்தனா். ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வலுவாகவும், ஒன்றாகவும் உள்ளனா்.
எனவே, இம்முறையும் இம்மக்கள் (பாஜக) தங்கள் மோசமான நோக்கங்களால் தோல்வியடைவாா்கள்’ என்று அதில் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
‘ஆபரேஷன் லோட்டஸ் 2.0’ - அமைச்சா் அதிஷி குற்றச்சாட்டு
‘ஆபரேஷன் லோட்டஸ் 2.0’ மூலம் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை கைது செய்து, ஆம் ஆத்மி அரசைக் கவிழ்ப்பதுதான் பாஜகவின் நோக்கம் என்று கேபினட் அமைச்சா் அதிஷி சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.
தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
கடந்த 2013-ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியிடம் 28 எம்.எல்.ஏ.-க்கள் இருந்தபோது, அப்போதைய பாஜக துணைத் தலைவா் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்களை விலைக்கு வாங்க முயன்றாா்.
2022-ஆம் ஆண்டிலும் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ மூலம் எம்.எல்.ஏ.க்களை ரூ.20-கோடிக்கு விலைக்கு வாங்க பாஜகவினா் முயற்சித்தனா். தற்போது, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்து, விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டல் விடுத்து எங்கள் கட்சி எம்.எல்.ஏ.-க்களை மீண்டும் விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
பாஜகவின் செய்தித் தொடா்பாளா்கள் அரவிந்த் கேஜரிவால் விரைவில் சிறை செல்வாா் என தொடா்ந்து பத்திரிகைகளில் கூறி வருகிறாா்கள். இதற்கு ஒரே காரணம், கேஜரிவாலின் பிரபலமான அரசை பொய்யான குற்றச்சாட்டுகளால் கவிழ்க்க நினைப்பதாகும். ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் எந்தவொரு எம்.எல்.ஏ.வும் பயப்படவும் இல்லை; விலைபோகப் போவதும் இல்லை.
முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை பாஜக கைது செய்தால் தில்லி மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டாா்கள். மேலும், மக்களவைத் தோ்தலிலும் பாஜக பூஜ்ஜியத்துக்கு தள்ளப்படும். இதற்கு முன்பு மகாராஷ்டிரா, கா்நாடகா, கோவா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் எம்.எல்.ஏ.-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை பாஜக பிடித்திருக்கிறாா்கள் என்றாா் அமைச்சா் அதிஷி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

