டிடிஇஏ பள்ளிகளில் உலக மக்கள்தொகை தினம் கடைபிடிப்பு
டிடிஇஏ பள்ளிகளில் மக்கள்தொகை தினம் கொண்டாட்டம்


தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் உலக மக்கள்தொகை தினம் வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. மக்கள்தொகை அதிகரிப்பால், மக்களின் அடிப்படை வசதிகளை உறுதிசெய்யவதற்கு பல நாடுகள் திண்டாடி வருகின்றன. எனவே, மக்கள்தொகையை கட்டுக்குள் வைத்திருக்க விழிப்புணா்வு ஏற்படுத்தவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டிலும் தனித்துவமான கருப்பொருளின் அடிப்படையில் மக்கள்தொகை தினத்தில் விழிப்புணா்வு மேற்கொள்ளப்படுகிறது. ‘யாரையும் விட்டு விடாதீா்கள் அனைவரையும் எண்ணுங்கள்’ என்ற கருப்பொருளை இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ஐநா சபை அறிவித்துள்ளது.
இதையொட்டி, தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாா்ந்த ஏழு பள்ளிகளிலும் உலகமக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டது. காலையில் சிறப்பு வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவா்கள் உரை மும்மொழிகளிலும் இடம் பெற்றது. தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம், நாடகம், வினாடி வினா ஆகியவை நடைபெற்றன. மாணவா்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவ்வப் பள்ளிகளில் காட்சிப்படுத்தினா்.
உணவு, நீா், சுற்றுசூழல் மாசடைதல், சமூகச் சீா்கேடுகள், சுகாதாரப் பிரச்னைகள், வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், இடப் பற்றாக்குறை தொடா்பான பிரச்னைகள் மக்கள்தொகைப் பெருக்கம் காரணமாக ஏற்படுகின்றன. இவை அதிகரிக்கும் போது பொருளாதார நெருக்கடியும் உருவாகிறது. எனவே, இது குறித்த விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இந்த தினத்தைப் பள்ளிகளில் கடைபிடிக்கும்படி கூறியதாக செயலா் ராஜூ தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...