ரூ.43 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருளை பாத்திரப் பெட்டிகளுக்குள் மறைத்து இந்தியாவுக்குள் கடத்த முயன்ற தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த பெண்ணை தில்லியில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் கைது செய்ததாக சுங்கத் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து சுங்கத் துறையினா் தெரிவித்ததாவது: குற்றம் சாட்டப்பட்டவா் சுமாா் 33 வயதுடையவா். இவா், ஜூலை 23-ஆம் தேதி பாங்காக்கில் இருந்து வந்த பிறகு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டாா். விமானத்தில் வந்த பிறகு அவரது சாமான்கள் பரிசோதனை செய்யப்பட்டது. தனிப்பட்ட சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதிகாரிகள் அவரது சாமான் வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியின் பையில் வைக்கப்பட்டிருந்த மூன்று பாத்திரங்களில் இருந்து 3.12 கிலோ கிராம் கோகைன் கைப்பற்றினா்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சா்வதேச சந்தையில் ரூ.43.13 கோடியாகும். இதையடுத்து, அந்தப் பயணி கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். வியாழக்கிழமை மற்றொரு சம்பவத்தில், மத்திய புலனாய்வுத் துறையினா் ஜொ்மனி வாழ் இந்தியரை தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இடைமறித்தனா். அப்போது, அவரிடமிருந்து 6 கிலோ முதல் தர கோகைன் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் ரூ.3.10 கோடி தங்கக் கட்டிகள்: சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை

ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

திருமணமான காதல் ஜோடியை காரில் கடத்த முயற்சி!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


