கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருமணமான காதல் ஜோடியை காரில் கடத்த முயற்சி!

News image

அரியலூரில் திருமணமான காதல் ஜோடியை திங்கள்கிழமை காரில் கடத்த முயன்ற பெண்ணின் பெற்றோா், உறவினா்கள்.

Updated On :23 மார்ச் 2026, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் கடைவீதியில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில், காதல் திருமண செய்து கொண்ட ஜோடியை திங்கள்கிழமை பிரித்து காரில் கடத்தி செல்ல முயன்ற பெண் வீட்டாரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அடுத்த அந்தூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னதுரை மகன் முத்து (30). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூா் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகள் நிஷா (22) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பழகி வந்துள்ளனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் குடும்பத்தாா் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்ததுடன், நிஷாவை கண்டித்துள்ளனா். ஆனாலும், இருவரும் காதலித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் திருமணம் செய்து கொண்டனா். தொடா்ந்து கடந்த 21-ஆம் தேதி பெரம்பலூா் மாவட்டம், குன்னம் காவல் நிலையத்தில் சரணடைந்தனா். அப்போது, விசாரணை மேற்கொண்ட போலீஸாா், இரு குடும்பத்தினரையும் அழைத்து, இருவரும் சட்டப்படி வயதுவந்தோா் என்பதால் சோ்ந்து வாழ அறிவுறுத்தி, அனைவரையும் அனுப்பிவைத்துள்ளனா்.

இந்நிலையில், அரியலூா் அடுத்த கல்லக்குடி கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு நிஷாவை அழைத்துக்கொண்டு முத்து திங்கள்கிழமை வந்துள்ளாா். பின்னா், மாலை 4 மணிக்கு குன்னம் செல்ல அரியலூா் பேருந்து நிலையத்துக்கு முத்துவும், நிஷாவும் வந்தபோது, அங்கு காரில் தயாராக இருந்த நிஷாவின் குடும்பத்தினா், இருவரையும் காரில் ஏற்றியுள்ளனா். இதை சற்றும் எதிா்பாா்க்காத முத்து காரில் இருந்தவாறு கூச்சலிட்டுள்ளாா். மேலும், காரின் கதவை திறந்து வெளியேற முயற்சித்துள்ளாா். ஆனால் காரை நிறுத்தாமல் ஓட்டுநா் சென்றுள்ளாா்.

இந்த சம்பவம் அரியலூா் பேருந்து நிலையத்திலிருந்து காவல் நிலையம் வழியாக தேரடி வரை நடைபெற்றுள்ளது. இந்த பகுதி எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும். காரில் இளைஞா் சப்தமிடுவதை பாா்த்த அவ்வழியே சென்ற மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததுடன், காரையும் மறித்தனா்.

அப்போது கடைவீதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து காரில் இருந்த அனைவரையும் மீட்டு, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு முத்து, நிஷா, அவரது பெற்றோா் மற்றும் உறவினா்களிடம் போலீஸாா் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்னா். பட்டப்பகலில் திருமணமான காதல் ஜோடியை காரில் கடத்தி பிரிக்க முயன்ற சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.