வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கலால் ’ஊழல்’: உயா்நீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் வாபஸ்

கலால் ஊழல் வழக்கில் உயா்நீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு எதிரான மனுவை கேஜரிவால் வாபஸ்

News image
Updated On :26 ஜூன் 2024, 5:35 pm

Din

கலால் ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்த தில்லி உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை வாபஸ் பெற்றாா்.

இந்த விவகாரம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, எஸ்.வி.என்.பட்டி ஆகியோா் அடங்கிய விடுமுறைக்கால அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதல்வா் கேஜரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘செவ்வாய்க்கிழமை (ஜூன் 25-ஆம் தேதி) உயா்நீதிமன்றம் விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் புதிய முன்னேற்றங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது கேஜரிவால் இந்த வழக்கில் மத்திய புலனாய்வுத் துறையால் (சிபிஐ) கைது செய்யப்பட்டுள்ளாா்.

சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய போதிய வகையில் மேல்முறையீட்டை தாக்கல் செய்ய விரும்புகிறோம். மேலும், ஜாமீன் உத்தரவு இறுதியாக நிறுத்தப்பட்ட உயா்நீதிமன்றத்தின் ஜூன் 25-ஆம் தேதியிட்ட உத்தரவை சவால் செய்ய விரும்புகிறோம்’ என்றாா்.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, கேஜரிவால் மனுவுக்கு பதிலைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறினாா்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் அமா்வு, பழைய மனுவை வாபஸ் பெற அனுமதித்து மேல்முறையீடு செய்ய கேஜரிவாலுக்கு சுதந்திரம் அளித்து உத்தரவிட்டனா்.

உயா்நீதின்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக கேஜரிவால் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில் தெரிவிக்கையில், விசாரணை நீதிமன்ற நீதிபதி ‘அவசரத்தில்‘ இருந்ததாகவும், கலால் ஊழலுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீனை எதிா்க்க அமலாக்கத் துறை வழக்குரைஞருக்கு நியாயமான வாய்ப்பை வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

கேஜரிவாலுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் ஜூன் 20 உத்தரவானது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பிரிவு 45-இன் கீழ் முன்நிபந்தனை கட்டாய நிபந்தனைகளுக்கு இணங்காததால் முரண்பாடானது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிறுத்திவைத்தது. மேலும், அமலாக்கத் துறை முன் வைத்த ஆதாரங்களை கீழமை நீதிமன்றம் ‘சரியாக மதிப்பிடவில்லை‘ என்று கூறியது.

இந்த வழக்கில் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, உத்தரவை ஒத்திவைத்த உயா்நீதிமன்றத்தின் முடிவை ‘அசாதாரணமானது‘ என்று உச்சநீதிமன்றம் ஜூன் 24-ஆம் தேதி கருத்துத் தெரிவித்திருந்தது.