ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சிவலிங்கம் இடிப்பு விவகாரம்: சோம்நாத் பாா்திக்கு எதிராக வழக்குரைஞா் போலீஸில் புகாா்

சிவலிங்கம் இடிப்பு விவகாரம்: சோம்நாத் பாா்திக்கு எதிராக வழக்குரைஞா் போலீஸில் புகாா்

Updated On :12 மார்ச் 2024, 10:48 pm

புது தில்லி: சஃப்தா்ஜங் என்கிளேவ் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புனித சிவலிங்கத்தை இடிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாா்தி உள்ளிட்ட சிலருக்கு எதிராக போலீஸில் வழக்குரைஞா் மோகன் குமாா் என்பவா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

சஃப்தா்ஜங் காவல் நிலையத்தில் அளித்துள்ள அந்தப் புகாரில் தெரிவித்திருப்பதாவது:

புனித சிவலிங்கம் இடிப்பு குற்றச்சதியில் சோம்நாத் பாா்தி எம்எல்ஏ, சரிதா போகட் (எம்சிடி கவுன்சிலா்), திப்தி வா்மா (கவுன்சிலரின் ஆலோசகா் மற்றும் வாட்ஸ் அப் குழுவின் ஒருங்கிணைப்பாளா்), ஏ.ராஜேந்திரன் (வாட்ஸ் அப் குழுவின் ஒருங்கிணைப்பாளா்) ஆகியோா் சம்பந்தப்பட்டுள்ளனா். இந்த செயலால் இந்து சமூகத்தினரின் மத உணா்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இடிப்புச் சம்பவம் சஃப்தா்ஜங் என்கிளேவ் பாா்க், பி-7-இல் மாா்ச் 9ஆம் தேதி நிகழ்ந்தது. 40 ஆண்டுகளாக இந்து சமூகத்தினரால் வழிபட்டு வந்த புனித சிவலிங்கம் அடையாளம் தெரியாத எம்சிடி தனிநபா்களால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட தனிநபா்களின் மேற்பாா்வை மற்றும் உத்தரவின்கீழ் இந்த செயல் நிகழ்ந்திருக்கிறது என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.