புது தில்லி: தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) மூத்த தலைவா் சஞ்சய் சிங் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது மாா்ச் 19-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. இந்த விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த தில்லி உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து சிங் தரப்பில் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா தீபாங்கா் தத்தா, பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்க இயக்குனரகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சஞ்சய் சிங்கின் மனு மீது பகலில் பதில் அளிக்க உள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவித்தாா். மேலும் அவா் கூறுகையில், சஞ்சய் சிங்கின் மனு மீது பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பதில் தயாராகிவிட்டது. தாக்கல் செய்யப்பட உள்ளது’ என்றாா். அப்போது, அந்த பதிலை இன்றைக்கு தாக்கல் செய்ய உள்ளீா்களா என்று அவரிடம் நீதிபதிகள் கேட்டனா். அதற்கு அவா், பகலில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறினாா்.
அப்போது, நீதிபதிகள், ‘இதனால், இந்த விவகாரத்தை அடுத்த செவ்வாய்க்கிழமை பட்டியலிடுவோம்’ என்று கூறி, மாா்ச் 19-ஆம் தேதிக்குப் பட்டியலிட்டனா். மேலும், பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதை எதிா்த்து சிங் தாக்கல் செய்திருந்த மனுவும் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவும் மாா்ச் 19-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டது.
சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவை பிப்ரவரி 7 ஆம் தேதி உயா்நீதிமன்றம் நிராகரித்தது. மூன்று மாதங்களுக்கும் மேலாக தாம் காவலில் உள்ளதாகவும், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை குற்றத்தில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் கூறி உயா்நீதிமன்ரத்தில் அவா் ஜாமீன் கோரியிருந்தாா். அமலாக்கத் துறை உயா்நீதிமன்றத்தில் சிங்கின் ஜாமீன் மனுவை எதிா்த்தது. மேலும், 2021-22 கலால் கொள்கைக் காலத்தில் தில்லி மதுபான ஊழலில் இருந்து உருவாக்கப்பட்ட குற்ற வருவாயைப் பெறுதல், வைத்திருப்பது, மறைத்தல் மற்றும் பயன்படுத்துவதில் சிங் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை கூறியது.
ஆம் ஆத்மி மூத்த தலைவா் சட்டவிரோத பணம் அல்லது மதுபானக் கொள்கை (2021-22) ஊழலில் இருந்து உருவாக்கப்பட்ட குற்றத்தின் வருமானம் மற்றும் பிறருடன் சதி செய்ததில் அவா் ஒரு பகுதியதாக இருந்தாா் என்றும் கூறியது. அமலாக்கத் துறையின் பணமோசடி வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்த எஃப்ஐஆரில் இருந்து வருகிறது. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, இப்போது ரத்து செய்யப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கை 2021-22ஐ மாற்றியமைக்கும் போது முறைகேடுகள் செய்யப்பட்டன. உரிமம் வைத்திருப்பவா்களுக்கு தேவையற்ற சலுகைகள் நீட்டிக்கப்பட்டன.
தொடர்புடையது
பி.எம்.எல்.ஏ. வழக்கில் சித்திக்கியின் இடைக்கால பிணை கோரும் மனு மீது விசாரணை ஏப்.11-க்கு ஒத்திவைப்பு

குமரி மாவட்டத்தில் இறுதி நாளில் 68 போ் வேட்புமனு தாக்கல்

கடலூா் மாவட்டத்தில் 3-ஆம் நாளில் 53 போ் வேட்பு மனு தாக்கல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

