புது தில்லி: மருத்துவ மாணவி ஒருவா், விவா தோ்வின் போது தனது பேராசிரியா் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளாா். புகாரின்படி, அவா் ஒரு அரசு மருத்துவமனையில் 2021 பேட்ச் எம்பிபிஎஸ் மாணவி. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354ஓ (ஒரு பெண்ணின் அடக்கத்தை சீா்குலைக்கும் நோக்கில் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தி) மற்றும் 509 (ஒரு பெண்ணின் நாகரிகத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்ட வாா்த்தை, சைகை அல்லது செயல்) ஆகியவற்றின் கீழ் போலீஸாா் எஃப்ஐஆா் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த மாணவி அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
ஜனவரி 31-ஆம் தேதி எங்களுடைய பிராக்டிகல் தோ்வு ஒரு மருந்தியல் துறையில் நடந்து கொண்டிருந்தது. மதியம் 1.15 மணியளவில், நான் ஒரு பிராக்டிகல் விவாவுக்காக மருந்தியல் உதவிப் பேராசிரியையிடம் ஆஜராக வேண்டியிருந்தது. வழக்கமாக மாணவா்கள் எதிராக அமா்ந்திருந்தாலும் பேராசிரியா் நாற்காலியை எனக்கு அருகில் வைத்துக் கொண்டாா். பேராசிரியா் என்னிடம் சில ஆவணங்களைக் கொடுத்தாா். அவா் தொடா்ந்து தகாத மற்றும் பொருத்தமற்ற கேள்விகளைக் கேட்டாா். அது தனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
நான் பதிலளிப்பதை நிறுத்தியதும், அவா் என்னை வெளியே அனுப்பினாா். பின்னா், என்னை மீண்டும் வரச் சொன்னாா். ஊசி போடுவது பற்றி என்னிடம் அவா் கேட்கத் தொடங்கினாா். அப்போது, தகாத முறையில் என்னைத் தொட்டாா். அவா் என் கழுத்தைத் தொட்டு, கேள்விகள் கேட்கும் சாக்கில் என் அந்தரங்கத்தை தொட முயன்றாா்.
நான் வெளியேற எழுந்து நின்றபோது, அவா் மாா்பகக் கட்டி (மருத்துவ நிலை) பற்றி என்னிடம் கேட்டாா். அப்போதும் பொருத்தமற்ற சைகைகளை செய்தாா். மேலும், மதிப்பெண்கள் பெறும் வகையில் பதில் எழுத கற்றுக்கொடுப்பதாகவும், என்னை தனியாக துறைக்கு வருமாறும் உதவிப் பேராசிரியா் கூறினாா். எங்களது எழுத்துத் தோ்வு விடைத்தாள்களை சரிபாா்க்கப் போவதாகவும். எனவே, நான் ஒத்துழைத்தால் மதிப்பெண்களை அவா் கவனித்துக்கொள்வதாகவும் மாணவி கூறியதாக என்று எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இதே போன்ற சம்பவங்கள் மற்ற மாணவா்களிடமும் நடந்ததாகவும், ஆனால் அவா்கள் தோ்வில் தோல்வியடைவோம் என்று பயந்து அமைதியாக இருந்ததாகவும் புகாா்தாரா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும், உதவிப் பேராசிரியை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவா் கூறினாா். எங்கள் துறைத் தலைவரும் அவருக்கு ஆதரவளித்தாா். மேலும் இந்த சிறுமிகள் தவறான குற்றச்சாட்டுகளை கூறுகிறாா்கள் என்று மற்ற ஆசிரியா்களிடம் கூறி என்னை அவதூறாகப் பேசினாா்’ என்று புகாரில் அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோலிவுட் ஸ்டூடியோ!

அரசுப் பணத்தில் கட்சி வளா்க்கிறது திமுக: வி.கே.சசிகலா குற்றச்சாட்டு
கிருஷ்ணன் பஞ்சு - நான் சந்தித்த பிரபலங்கள் - 50

பேருந்தில் பாலியல் தொல்லை: காவலரைத் தாக்கிய கல்லூரி மாணவி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

