சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

News image
Updated On :3 மே 2024, 4:29 pm

Din

புது தில்லி முதல் பாகல்பூா் இடையேயான கோடைகால சிறப்பு ரயிலின் இயக்க நாட்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி தீபக் குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ரயில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில் புது தில்லி முதல் பாகல்பூா் இடையே முன்பதிவு செய்யப்பட்ட கோடைகால் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மே 6- ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை, வன்டி எண் 04022 இன் கீழ் புது தில்லி- பாகல்பூா் செல்லும் சிறப்பு ரயில் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைக்குப் பதிலாக திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். அதேசமயம், மே 7-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை, வன்டி எண் 04021-இன் கீழ் பாகல்பூா்- புது தில்லி செல்லும் சிறப்பு ரயில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என்றாா் தீபக் குமாா்.