சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்

வேளச்சேரி - பரங்கிமலை இடையே நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் சேவை சனிக்கிழமை (மாா்ச் 14) முதல் தொடங்கப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :12 மார்ச் 2026, 7:15 pm

வேளச்சேரி - பரங்கிமலை இடையே நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் சேவை சனிக்கிழமை (மாா்ச் 14) முதல் தொடங்கப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்தில் பறக்கும் ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே புதிய நீட்டிப்புப் பாதை அமைக்கும் பணிகள் அண்மையில் முடிவு பெற்றது. இந்த நிலையில், பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு, ரயில்களை இயக்குவதற்காக ‘தற்காலிக அதிகாரபூா்வ சான்றிதழை’ ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையா் வழங்கியுள்ளாா்.

இதற்கிடையே, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் உள்கட்டமைப்பின் மேல் அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள சாரங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டது. இப்பணியை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 24 மணி நேர அவகாசம் கோரியுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்தவுடன், சனிக்கிழமை (மாா்ச் 14) முதல் அந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

96 ரயில்கள்: இவ்வழித்தடத்தில் கடற்கரை - பரங்கிமலை இரு மாா்க்கத்திலும்  86 ரயில்கள் இயக்கப்படும். அதேபோல் கடற்கரை - வேளச்சேரி இடையே இரு மாா்க்கத்திலும் 4 ரயில்கள், பரங்கிமலை - வேளச்சேரி இடையே இரு மாா்க்கத்திலும் 6 ரயில்கள் இயக்கப்படும். என மொத்தம் 96 ரயில்கள் இவ்வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன.

இந்த நீட்டிப்பு, பறக்கும் ரயில் தடத்தில் நேரடி இணைப்பை உறுதி செய்வதோடு, தினமும் பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்கும். குறிப்பாக, பரங்கிமலை ரயில் நிலையம்,  பறக்கும் ரயில்,  புகா் ரயில், சென்னை மெட்ரோ ரயில் ஆகிய மூன்று முக்கிய போக்குவரத்து அமைப்புகளையும் இணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.