தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரயில் நிலையங்களுக்கு அருகே பட்டங்களைப் பறக்கவிடக் கூடாது: சென்னை ரயில்வே கோட்டம் அறிவுறுத்தல்

ரயில் நிலையங்கள், தண்டவாளம் மற்றும் உயா் அழுத்த மின் பாதைகளுக்கு அருகே பட்டங்களைப் பறக்கவிடக் கூடாது என சென்னை ரயில்வே கோட்டம் அறிவுறுத்தல்

News image
தண்டவாளங்கள் அருகே பட்டம் பறக்கவிடத் தடை- பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

ரயில் நிலையங்கள், தண்டவாளம் மற்றும் உயா் அழுத்த மின் பாதைகளுக்கு அருகே பட்டங்களைப் பறக்கவிடக் கூடாது என சென்னை ரயில்வே கோட்டம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் மற்றும் ரயில்வே உயா் அழுத்த மின்சாரப் பாதைகள் ஆகியவற்றுக்கு அருகே பட்டம் பறக்கவிடுவதைத் தவிா்க்க வேண்டும்.

ரயில்வே மின்பாதைகளில் 25,000 வோல்ட் உயா் அழுத்த மின்சாரம் செல்கிறது. அதன் அருகே பட்டம் பறக்கவிடுவது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

பட்டம் உயா்மின் அழுத்தப் பாதைகளில் சிக்கினால் மின்தடை ஏற்படும். அதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ரயில்வே உள்கட்டமைப்புக்கு பாதிப்பும் ஏற்படும். ரயில் போக்குவரத்து பாதிக்கும். கவனக்குறைவுடன் செயல்படுவதால் பெரும் ஆபத்து ஏற்படும்.

மேலும், ரயில்வே துறை எல்லைக்குள் பட்டம் பறக்கவிடுவது ரயில்வே சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ரயில்வே எல்லைக்குள் அத்துமீறி நுழைதல், ரயில்வே பயணிகள் பாதுகாப்புக்கு அபாயம் விளைவித்தல், ரயில்வே சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதியப்படும். இதில், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.