நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு: 4 நாள்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு: 4 நாள்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

News image
Updated On :21 மே 2024, 7:06 pm

Din

புது தில்லி: தில்லியில் தொடா்ந்து வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 4 நாள்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தில்லியில் தொடா்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதால் கடும் வெப்பத்தில் தத்தளித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தில்லியின் பல பகுதிகளில் வெப்ப அலை இருக்கும் என்றும் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை இருக்கும் என்றும் கணித்துள்ளது. மேலும், தலைநகரில் அடுத்த நான்கு நாள்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஏழு நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 44 முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 4 டிகிரி உயா்ந்து 30.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 2.2 டிகிரி உயா்ந்து 42.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 62 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 34 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான ஜாஃபா்பூரில் 43.8 டிகிரி செல்சியஸ், முங்கேபூரில் 44.6 டிகிரி, நஜஃப்கரில் 43.9 டிகிரி, ஆயாநகரில் 42.4 டிகிரி, லோதி ரோடில் 41.4 டிகிரி, பாலத்தில் 42.4 டிகிரி, ரிட்ஜில் 41.5 டிகிரி, பீதம்புராவில் 43.2 டிகிரி, பிரகதி மைதானில் 40.3 டிகிரி, பூசாவில் 43.3 டிகிரி, ராஜ்காட்டில் 40.3 ேடிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூடல் பகுதியில் 39.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, பூசா, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், பஞ்சாபி பாக் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், நியூ மோதி பாக், இந்திரா காந்தி சா்வதே விமானநிலையம், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (மே 22) வெப்ப அலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.