

தில்லி முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தை நடத்துவதற்கு இரண்டு பார்வையாளர்களை நியமித்து பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.
தில்லி முதல்வர் பதவியேற்பு விழா, பிப்ரவரி 20ஆம் தேதி காலை 10 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி பத்து நாள்களாகும் நிலையில், முதல்வரின் பெயரை பாஜக வெளியிடாமல் இருக்கிறது.
தில்லி பிரதேச பாஜக தலைமை அலுவலகத்தில் இன்றிரவு முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்தி புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய பாஜக தலைமை இரு தலைவர்களை பார்வையாளராக நியமித்துள்ளது.
முன்னாள் அமைச்சரும் பாஜக எம்பியுமான ரவி சங்கர் பிரசாத் மற்றும் பாஜக தேசிய செயலாளர் ஓம் பிரகாஷ் தன்கட் ஆகியோர் மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தில்லிக்கு மகளிர் முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என்ற பரிந்துரை முழுமையாக பரிசீலிக்கப்படுவதாகவும் ரேகா குப்தா மற்றும் அஜய் மஹாவர் பெயர்கள் போட்டியில் முன்னிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.