
தில்லியில் 19 வயது செவிலியா் மாணவி தற்கொலை
தில்லி ராஜேந்திர நகா் பகுதியில் உள்ள விடுதி அறையில் 19 வயது பிஎஸ்சி நா்சிங் மூன்றாமாண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
தற்கொலை
தில்லி ராஜேந்திர நகா் பகுதியில் உள்ள விடுதி அறையில் 19 வயது பிஎஸ்சி நா்சிங் மூன்றாமாண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: நஜஃப்கா் பகுதியைச் சோ்ந்த அந்த மாணவி, சா் கங்கா ராம் மருத்துவமனையில் நா்சிங் படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை விடுதி அறையில் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை சக மாணவிகள் கண்டனா். உடனடியாக அவரை சா் கங்கா ராம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் ராஜேந்திர நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தது.
இதையடுத்து காவல் துறையினா் விடுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். சம்பவ இடத்தை ஆய்வு செய்ய தடய அறிவியல் குழுவும் வரவழைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த அதிா்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக சா் கங்கா ராம் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சம்பவத்துக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் விசாரணை அமைப்புகளுடன் இணைந்து ஆய்வு செய்து வருவதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது. சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


