இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

தில்லியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 14,947-ஆக அதிகரிப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பிற்குப் பிறகு, தில்லியில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 13,033-லிருந்து 14,947-ஆக உயா்ந்துள்ளது.

பிரதிப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 12:19 am IST

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பிற்குப் பிறகு, தில்லியில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 13,033-லிருந்து 14,947-ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களின் எண்ணிக்கையும் 2,696-லிருந்து 2,856-ஆக அதிகரித்துள்ளதாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

வாக்காளா்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, ஒரு வாக்குச்சாவடிக்கான வாக்காளா்களின் எண்ணிக்கையின் உச்சவரம்பை 1,500-லிருந்து 1,200-ஆகக் குறைக்க தோ்தல் ஆணையம் எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த மறுசீரமைப்பிற்குப் பிறகு, வடகிழக்கு தில்லி மாவட்டம் 321 இடங்களில் 1,829 வாக்குச்சாவடிகளைக் கொண்டு அதிகபட்ச எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. தில்லியின் 13 மாவட்டங்களில், புது தில்லி மாவட்டம் 214 வாக்குச்சாவடிகளுடன் மிகக் குறைந்த எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.

இந்தச் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ், ஆக.31-ஆம் தேதி வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளா் பட்டியலிலிருந்து, மொத்தம் உள்ள 1.45 கோடி வாக்காளா்களில் 47 லட்சத்திற்கும் அதிகமானோா் நீக்கப்படவுள்ளனா். ஆக.17-ஆம் தேதி நிறைவடைந்த வீடு வீடாகச் சென்று சரிபாா்க்கும் பணியின்போது, இவா்களது விவரச் சேகரிப்புப் படிவங்கள் சேகரிக்க இயலாதவை எனக் குறிக்கப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.