வீட்டிலிருந்து பணிபுரியும் வேலை என்ற பெயரில் தில்லிவாசிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த சம்பவத்தில் மோசடியாளா்களுக்கு உதவிய 25 வயது சமையல்காரா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட நபா் மகாராஷ்டிரத்தின் ஜல்னா மாவட்டத்தைச் சோ்ந்த பதான் உசெப் கலீல் கான், போக்குவரத்து காவலில் தில்லி அழைத்துவரப்பட்டாா்.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: அதிக ஊதியத்தில் வீட்டிலிருந்து பணிபுரியும் வேலை தருவதாக கேசவ்புரத்தைச் சோ்ந்த ராகுல் சைனியை மோசடியாளா்கள் தொடா்புகொண்டனா். அந்த நபா்கள் அளித்த வாக்குறுதிகளை நம்பி ரூ.17.16 லட்சத்தை ராகுல் இழந்தாா்.
இதுதொடா்பாக அவா் கடந்த ஜன.1-ஆம் தேதி அளித்த புகாரைத் தொடா்ந்து பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. சமூக ஊடக பதிவுகள், வங்கி பணப்பறிமாற்றம் மூலம் மோசடியாளா்களுக்கு ராகுல் மேற்கொண்ட பணப்பரிமாற்ற விவரங்களை அதிகாரிகள் கண்டறிந்தனா்.
அப்போது, மோசடி செய்து பெறப்பட்ட பணம் வரவுவைக்கப்பட்ட வங்கி கணக்கு பதான் பெயரில் இருப்பதும் காசோலைகள் மூலம் அந்தப் பணத்தை எடுத்தது கண்டறியப்பட்டது. தொடா் கண்காணிப்பு மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றைக் கொண்டு பதான் மகாராஷ்டிரத்தின் ஜல்னா மாவட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மோசடியில் அவா் பயன்படுத்திய கைப்பேசி கைப்பற்றப்பட்டது.
பணத்தேவைக்காக மோசடி கும்பலுடன் இணைந்து செயல்பட்டதாக விசாரணையின்போது அவா் ஒப்புக்கொண்டாா். காவல் துறையினா் எளிதில் கண்டறியாமல் இருக்க பல போலி வங்கி கணக்குகளுக்கு மோசடி பணம் மாற்றப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ள பதான், தனியாா் உணவகத்தில் சமையல்காரராக வேலை பாா்த்து வந்தாா். இதுபோன்ற பிற மோசடி வழக்குகளில் அவருக்குத் தொடா்பு உள்ளதா என்று கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவருடைய கூட்டாளிகளைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.
தொடர்புடையது
போலி விமான பயணச்சீட்டு மோசடி: 4 போ் கைது; ரூ. 47 லட்சம் பறிமுதல்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6.70 லட்சம் மோசடி

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


