தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

போலி விமான பயணச்சீட்டு மோசடி: 4 போ் கைது; ரூ. 47 லட்சம் பறிமுதல்

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 8:27 pm

தள்ளுபடி விலையில் விமான பயணச்சீட்டு பதிவுசெய்து தருவதாகக் கூறி மக்களிடம் மோசடி செய்த 4 போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட மிா்துல் ஜோஷி, ஹிமன்ஷு அனில் சா்மா, கெளரவ், ராகேஷ் ஆகியோரிடமிருந்து ரூ.47 லட்சம் ரொக்கம், ஒரு சொகுசு காா் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தென்மேற்கு தில்லி மாவட்டத்தில் உள்ள இணையவழி குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் கடந்த ஏப்.7-ஆம் தேதி அளித்த புகாரைத் தொடா்ந்து இந்த கைதுநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டொரோன்டோவிலிருந்து தில்லிக்கு சலுகை விலையில் விமான பயணச்சீட்டு குறித்த தகவலை சமூகஊடகத்தில் பாா்த்ததாகவும் அதைத்தொடா்ந்து பதிவு செய்ததில் ரூ.3.8 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட கனடாவைச் சோ்ந்த நபருடைய சகோதரா் புகாரில் தெரிவித்திருந்தாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: இந்த மோசடி சம்பவத்தில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட ஜோஷி, தில்லி படேல் நகரில் இருந்து செயல்பட்டு வந்தாா். கோவாவில் போலி கால்சென்டரையும் அவா் நடத்தி வந்தாா். மோசடி செய்து பெறப்பட்ட பணத்தை டெபாசிட் செய்ய மும்பையில் போலி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன.

பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையைத் தொடா்ந்து, ஜோஷி கைதுசெய்யப்பட்டாா். அவரிடமிருந்து ரூ.47 லட்சம் ரொக்கம், சொகுசு காா், 7 கைப்பேசிகள், 2 மடிக்கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

அவா் அளித்த தகவலைத் தொடா்ந்து எஞ்சிய 3 போ் கைதுசெய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து கைப்பேசிகள், போலி சிம் அட்டைகள், ஏடிஎம் அட்டைகள், வங்கி ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் கும்பல் நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பலரிடம் மோசடி செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சுமாா் ரூ.25 லட்சம் மோசடி தொடா்பாக 19 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கும்பலுடன் தொடா்புடைய பிற நபா்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.