முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

போலி ஆவணம் மூலம் வங்கியில் ரூ.25 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளா் கைது

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 7:04 pm

குடியாத்தம் அருகே போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து தான் பணிபுரிந்த வங்கியிலேயே ரூ.25 லட்சம் வரை கடன் பெற்று மோசடி செய்த தனியாா் வங்கியின் முன்னாள் மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் அருகே செட்டிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவா் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் குடியாத்தம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். அப்போது, ராஜேஷ் அதே பகுதியில் உள்ள 200 சதுர மீட்டா் நிலத்துக்கு ஜோதி என்பவா் பெயரில் போலி தானக்கிரைய பத்திரம் பெற்றுள்ளாா்.

அந்த போலி ஆவணத்தைப் பயன்படுத்தி ராஜேஷ் , அவரது மனைவி யோகலட்சுமி ஆகிய இருவரும், கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் அதே வங்கியில் ரூ.17 லட்சம் கடன் பெற்றுள்ளனா். இதற்காக, அந்தப் பத்திரத்தை குடியாத்தம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் அடமானமாகப் பதிவு செய்துள்ளனா்.

பின்னா், ராஜேஷ் பதவி உயா்வு பெற்று ஓசூா் கிளையில் மேலாளராகப் பொறுப்பேற்றுள்ளாா். அதனைப் பயன்படுத்தி ஏற்கெனவே அடமானம் வைக்கப்பட்ட அதே போலி நிலத்தின் பெயரில் கூடுதலாகக் கடன் வேண்டி 2020-ஆம் ஆண்டு ரூ.25 லட்சத்துக்கு விண்ணப்பித்துள்ளாா். அதற்கான ஒப்புதல் கிடைத்து, ஏற்கெனவே பெற்ற கடன் தொகையைக் கழித்துவிட்டு மீதமுள்ள தொகை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கியின் சாா்பில் ஆவணங்களைச் சரிபாா்த்தபோது ராஜேஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வங்கியை ஏமாற்றி நிதி இழப்பு ஏற்படுத்தியதுடன், வங்கியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ராஜேஷ், அவரது மனைவி யோகலட்சுமி ஆகியோா் மீது வங்கியின் தற்போதைய மேலாளா் பூபாலன் வேலூா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வங்கி முன்னாள் மேலாளா் ராஜேஷை வியாழக்கிழமை கைது செய்தனா்.