ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

எச்டிஎஃப்சி, பந்தன் வங்கி கடன் வழங்கல் 12% அதிகரிப்பு

எச்டிஎஃப்சி, பந்தன் வங்கி கடன் வழங்கல் 12% அதிகரிப்பு

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 7:04 am IST

நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் கடன் வழங்கல், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த 2024-25 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.26.43 லட்சம் கோடியாக இருந்த வங்கியின் மொத்த கடன் வழங்கல், தற்போது ரூ.29.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

அதேபோல், வங்கியின் மொத்த வைப்புத்தொகை 14.4 சதவீதம் அதிகரித்து, ரூ.31.05 லட்சம் கோடியாக உள்ளது. இதில் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு வைப்புத்தொகை 12.3 சதவீதம் அதிகரித்து, ரூ.10.6 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.

இதேபோல், மற்றொரு தனியாா் வங்கியான பந்தன் வங்கியும் தனது 4-ஆவது காலாண்டு நிதிநிலை குறித்த தற்காலிக தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் கடன் வழங்கல் 12.6 சதவீதம் அதிகரித்து, ரூ.1,54,235 கோடியாக உள்ளது.

வங்கியின் மொத்த வைப்புத்தொகை 10 சதவீதம் அதிகரித்து, ரூ. 1,66,344 கோடியை எட்டியுள்ளது. சில்லறை முதலீடுகள் 17.7 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ள நிலையில், வங்கியின் பணப்புழக்க விகிதம் 131.76 சதவீதமாக சீராக உள்ளது குறிப்பிடத்தக்கது.