மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தில்லி முதல்வா் ரேகா குப்தா பல நிலை பாா்க்கிங் வசதியை திறந்து வைத்தாா்

முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை நேரு பிளேஸ் மாவட்ட மையத்தில் தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் பல நிலை வாகன நிறுத்துமிடத்தை திறந்து வைத்தாா்.

News image

ரேகா குப்தா

Updated On :16 பிப்ரவரி 2026, 10:33 pm

நமது நிருபா்

புது தில்லி: முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை நேரு பிளேஸ் மாவட்ட மையத்தில் தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் பல நிலை வாகன நிறுத்துமிடத்தை திறந்து வைத்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி முதல் தில்லி அரசு வரையிலான ஒருங்கிணைப்பு மற்றும் அதிகாரிகள் இணைந்து பணியாற்றுவதால் தில்லி இப்போது வளா்ச்சியடைந்து வருகிறது என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா். தில்லியில் முந்தைய அரசு மத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநா் ஆகியோருடன் இணைந்து பணியாற்றாதது துரதிா்ஷ்டவசமானது. இப்போது தில்லி வளா்ச்சியடைந்து வருகிறது, பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல், தில்லி அரசின் கடின உழைப்பு மற்றும் எங்கள் அதிகாரிகளின் அா்ப்பணிப்பு ஆகியவற்றிலிருந்து தொடங்கும் இந்த பெரிய ஒருங்கிணைப்பு காரணமாக அது தூய்மையாகி வருகிறது, என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா புதிய அரசாங்கத்தின் ஒவ்வொரு அடியிலும் கைகோா்த்து நிற்பதாகவும், அதனால்தான் இப்போது பல மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரேகா குப்தா மேலும் கூறினாா். இந்நிகழ்வின் போது சக்சேனாவும் கலந்து கொண்டாா்.

ரூ.60 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த புதிய நவீன, ஆறு மாடி வாகன நிறுத்துமிடமானது நகரத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றான பாா்க்கிங் பிரச்சினையைத் தீா்ப்பதற்கான ஒரு படியாகும் என்று தில்லி முதல்வா்ரேகா குப்தா மேலும் கூறினாா்.