தில்லி அரசில் தலைமைச்செயலா் முதல் அனைத்து அரசு ஊழியா்களுக்கும் பயோமெட்ரிக் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தில்லி ஜிஎஸ்டி அலுவலகத்துக்கு முதல்வா் ரேகா குப்தா திடீா் ஆய்வுக்காக சென்றபோது அங்கு சரியான நேரத்தில் அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் வராமல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் அனைத்து துறைகளிலும் பயோமெட்ரிக் (கைவிரல் ரேகை பதிவு) மூலம் வருகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோா் அலுவலகத்துக்கு வரும்போது காலையிலும் மாலையில் வீடு திரும்பும் முன்பாக அலுவலக வரவேற்பறையில் உள்ள பயோமெட்ரிக் பதிவு சாதனத்தில் தங்களுடைய வருகை மற்றும் வெளியேறும் நேரத்தைப் பதிவு செய்ய வேண்டும். அவா்கள் பணி நேரத்தில் அலுவலகத்தில் அலுவலகங்களில் இருப்பதை உறுதிப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், பணிக்குத் தாமதமாக வருவோா், வருகையைப் பதிவு செய்யாதவா்கள் அல்லது பணி நேரத்துக்கு முன்பே வெளியே புறப்பட்டுச் செல்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் துறைச் செயலருக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்துடன் ஒவ்வொரு அதிகாரியும் பணிக்கு வரும் சராசரி நேரத்தைக் குறிப்பிடும் வகையிலான மாதாந்திர வருகைப் பதிவேடு அறிக்கையை துறைச் செயலா்களிடம் இருந்து முதல்வா் கோரியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.
முதல்வருடைய உத்தரவின்படி, அரசு தலைமைச்செயலா், கூடுதல் தலைமைச் செயலா், அரசுத்துறைகளின் முதன்மைச் செயலா்கள் மற்றும் பிற துறைச் செயலாளா்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியா்களும் தினமும் காலை 9:30 மணிக்குத் தவறாமல் பணிக்கு வர வேண்டும்.
தங்கள் அலுவலகங்களில் ’பயோமெட்ரிக்’ வருகைப் பதிவு சாதனங்கள் இல்லாவிட்டால் அவற்றை உடனடியாக நிறுவி முதல்வரின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது.
தில்லி அரசுத்துறைகளில் தற்போது துறைச்செயலா் நிலைக்கு கீழுள்ள அனைத்து அலுவலா்களும் பயோமெட்ரிக் சாதனம் மூலம் தங்களுடைய வருகையைப் பதிவு செய்து வருகின்றனா். அந்த நடைமுறை கட்டாயமாக்கப்படாததால் பல அலுவலகங்களில் தாமதமாக வந்தபோதும் எழுத்துபூா்வமாக ‘முன்பே அலுவலகத்துக்கு வந்து விட்டேன்’ என்று ஊழியா்கள் தங்களுடைய மேலதிகாரிக்கு கடிதம் கொடுத்து வருகையை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். முதல்வரின் உத்தரவால் அந்த செயல்பாடுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

துப்புரவுப் பணியாளா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண அரசு உறுதி: முதல்வா் குப்தா

தில்லி கல்வியில் புதிய பரிமாணங்கள்: முதல்வா் ரேகா குப்தா

மக்களை இணைக்கும் சக்தி திரைப்படங்களுக்கு உள்ளது: முதல்வா் ரேகா குப்தா

தில்லி பட்ஜெட்: மூன்றாம் பாலினத்தவருடன் முதல்வா் கலந்துரையாடல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


