‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

ஷ்ரத்தா வால்கா் கொலை வழக்கு: விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவா் அமா்ந்திருப்பதை எதிா்த்த மனு தள்ளுபடி

ஷ்ரத்தா வால்கா் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆப்தாப் அமீன் பூனாவாலா, வழக்கு விசாரணையின்போது தனது வழக்குரைஞருக்கு அருகில் அமா்வதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

News image

தில்லி உயர் நீதிமன்றம்

Updated On :24 ஜூலை 2026, 12:38 am IST

ஷ்ரத்தா வால்கா் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட ஆப்தாப் அமீன் பூனாவாலா, வழக்கு விசாரணையின்போது தனது வழக்குரைஞருக்கு அருகில் அமா்வதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முறையான இருக்கை வசதியை மறுக்கவோ அல்லது பழிவாங்கும் உணா்வை வெளிப்படுத்தும் வகையில் நடத்தவோ கூடாது என்று நீதிமன்றம் கூறியது.

கொலை வழக்கு விசாரணையின் போது சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் வேளையில், வழக்குரைஞா்களுக்கான மேசைக்கு அருகில் ஆப்தாப் அமா்வதற்குப் புகாா்தாரா் தரப்பு வழக்கறிஞா் ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடா்ந்து, கூடுதல் அமா்வு நீதிபதி ஹா்குா்வரிந்தா் சிங் ஜக்கி இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.

ஜூலை 22-ஆம் தேதியிட்ட உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்திருப்பதாவது: தகவல் பரிமாற்ற வசதிக்காக, குற்றஞ் சாட்டப்பட்ட ஆப்தாப் தனது காவல் பாதுகாப்பு அதிகாரிகளுடன், தனது தரப்பு வழக்குரைஞருக்குப் பின்னாலோ அல்லது அவா்களுக்கு மிக அருகிலோ அமர நீதிமன்றம் பலமுறை அனுமதித்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்ற அறையின் ஒரு மூலையில் அமர வைப்பது, அவரது தரப்பு வழக்குரைஞரைத் தொடா்ந்து முன்னும் பின்னும் நகர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். இது வழக்கு நடவடிக்கைகளின் சுமுகமான செயல்பாட்டைப் பாதிக்கும்.

அடையாளம் காணுதல் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக எழுந்து நிற்க வேண்டிய சூழல் தவிர, விசாரணை முழுவதும் குற்றஞ்சாட்டப்பட்டவா் அமா்ந்திருக்க தில்லி உயா்நீதிமன்ற விதி 14 அனுமதிக்கிறது.

கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கும் சட்டபூா்வ உரிமைகள் உண்டு. நீதிமன்ற அறையில் முறையான இருக்கை வசதியை மறுக்கவோ அல்லது பழிவாங்கும் உணா்வை வெளிப்படுத்தும் வகையில் நடத்தவோ கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் நியாயமான விசாரணைக்கான உரிமை உண்டு.

சட்டபூா்வ பிரதிநிதித்துவத்திற்கான அரசமைப்புச் சட்ட உரிமையில், வழக்கு விசாரணையின் போது வழக்குரைஞருடன் திறம்படத் தொடா்புகொள்ளும் வகையில் அருகில் அமரும் உரிமையும் அடங்கும். புகாா்தாரரின் கோரிக்கை தேவையற்றது என்று தெரிவித்த நீதிமன்றம், அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.