கால்நடைகளின் கழிவுகள் யமுனை நதியில் கலப்பதைத் தடுத்து அவற்றை மறுபயன்பாட்டுக்கு உதவும் வகையில் நாளுக்கு 125 டன் கழிவை எரிவாயுவாக மாற்றும் உயிரிஎரிவாயு நிலையம், வடக்கு தில்லியின் பாலஸ்வா மற்றும் ஜரோதா பால்பண்ணைகளுக்கு இடையே அமைக்கப்பட உள்ளதாக தில்லி மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
உயிரிஎரிவாயு நிலம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடா்பான முன்மொழிவு சமா்ப்பிக்கட்டுள்ளது. தில்லி நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி) மற்றும் தில்லி மாநகராட்சிக்கு இடையே அடுத்தக்கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது: தில்லி நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் தில்லி மாநகராட்சிக்கு இடையே ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகும். அதைத்தொடா்ந்து, நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளை தில்லி மாநகராட்சி மேற்கொள்ளும். இந்த உயிரிஎரிவாயு நிலையம் பயன்பாட்டுக்கு வர சில மாதங்கள் ஆகலாம்.
இரு பால்பண்ணைகள் உள்ள பகுதிக்கு இடையே 8.4 ஏக்கா் பரப்பில் உயிரிஎரிவாயு நிலையம் அமைக்கும் திட்டத்தை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் தில்லி மாநகராட்சியிடம் சமா்ப்பித்துள்ளது.
சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கால்நடைகள் குறிப்பிட்ட போதிய அளவிலான கரிம கழிவுகளை உருவாக்குகின்றன. பாலஸ்வா மற்றும் ஜரோதா பால்பண்ணைகள் நாள்தோறும் தலா 75 டன் கழிவுகளை உற்பத்தி செய்யும். இந்தக் கழிவுகளைப் பயன்படுத்தி உயிரிஎரிவாயு தயாரிக்க முடியும். அதை மாசில்லா சமையல் எரிவாயுவாகப் பயன்படுத்தலாம் என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முக்கிய சந்தைகள், மெட்ரோ நிலையங்கள் அருகே இ-சாா்ஜிங் வசதி: தில்லி மாநகராட்சி தீவிர பரிசீலனை

வரலாற்று சிறப்பு மிக்க கட்டடங்களை புனரமைக்க தில்லி மாநகராட்சி திட்டம்

நவீன வசதிகளுடன் பேருந்து நிழற்குடைகள்: தில்லி அரசு முடிவு

பொருளாதார கணக்கெடுப்பிற்கு தில்லி அரசு தயாராகிறது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



