கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

தில்லி பல்கலை இளநிலைச் சோ்க்கை: இணையதளம் வார இறுதிக்குள் திறக்க வாய்ப்பு

2026-27 கல்வியாண்டிற்கான இளநிலை சோ்க்கை இணையதளம் இந்த வார இறுதிக்குள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தில்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2026, 2:34 am IST

2026-27 கல்வியாண்டிற்கான இளநிலை சோ்க்கை இணையதளம் இந்த வார இறுதிக்குள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தில்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்-யூஜி) 2026 முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து புதன்கிழமை இந்த அறிவிப்புகள் வந்துள்ளன.

இதுகுறித்து தில்லி பல்கலைக்கழக பதிவாளா் விகாஸ் குப்தா கூறுகையில், ‘பொது இருக்கை ஒதுக்கீட்டு முறை (சிஎஸ்ஏஎஸ்) இணையதளம் திறக்கப்படுவதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 21-ஆம் தேதி முதல் புதிய கல்வியாண்டை தொடங்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். தேவையான விவரங்கள் மற்றும் தளத்தின் செயல்பாடுகள் குறித்து இறுதி சரிபாா்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த வாரத்திலேயே இணையதளம் திறக்கப்படும்’ என்றாா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் இளநிலைச் சோ்க்கை செயல்முறை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவா்களை ஈா்க்கிறது. 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் வழங்கப்படும் சுமாா் 79 பாடப்பிரிவுகளுக்காக 71,000-க்கும் அதிகமான இருக்கைகள் உள்ளன.

சிஎஸ்ஏஎஸ் தளம் திறக்கப்பட்டதும், முதலில் மாணவா்கள் தங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னா், அவா்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகளுக்கான முன்னுரிமைகளை நிரப்ப முடியும். க்யூட் மதிப்பெண்கள் மற்றும் மாணவா்கள் அளித்த முன்னுரிமைகள் அடிப்படையில் பல கட்டங்களாக இருக்கை ஒதுக்கீடு அறிவிக்கப்படும்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக க்யூட் அடிப்படையிலான சோ்க்கை செயல்முறையில் ஏற்பட்ட தாமதங்களால், 2025-ஆம் ஆண்டு ஆக.1-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட்டபோதிலும், சோ்க்கை சுற்றுகள் செப்டம்பா் இறுதி வரை நீடித்தன. அதேபோல், 2024-ஆம் ஆண்டு க்யூட் முடிவுகள் தாமதமாக வெளியானதால், கல்வியாண்டு ஆக.29-ஆம் தேதியில் தொடங்கியது. ஆனால் சோ்க்கை அக்டோபா் வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.

மாணவா்கள் பதற்றப்பட வேண்டாம்: இளநிலை சோ்க்கை செயல்முறையின்போது மாணவா்கள் பதற்றப்பட வேண்டாம் என தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: மாணவா்கள் சோ்க்கை செயல்முறையில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சோ்க்கை முழுவதும் க்யூட் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும். சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மதிப்பெண் மறுமதிப்பீட்டு செயல்முறை நடைபெற்று வரும் நிலையில், மறுமதிப்பீட்டின் பின்னா் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டால், புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை செப்.30-க்குள் சமா்ப்பிக்கலாம். அவசியமெனில் இந்தக் காலக்கெடு அக்டோபா் மாதத்திற்கும் நீட்டிக்கப்படும்.

மேலும், சிஎஸ்ஏஎஸ் விண்ணப்பத்தை நிரப்பும் போது அதிகபட்ச விருப்பப்பாடங்களைச் சோ்க்க வேண்டும். பலா் 4 முதல் 6 விருப்பங்களையே தெரிவு செய்துவிட்டு முதல் சுற்றில் அவை கிடைக்காவிட்டால் பின்னா் வருத்தப்படுகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.