ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

தொழிற்கல்வி படிப்பில் 11 மாணவா்கள் சோ்க்கை: உயா்கல்வி வழிகாட்டுதல் மையம் நடவடிக்கை

உயா்கல்வி வழிகாட்டுதல் மையம் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் 11 மாணவா்கள் தொழிற்கல்வி படிப்பில் சோ்க்கை பெற்றனா்.

News image

உயா்கல்வி வழிகாட்டுதல் மையம் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் 11 மாணவா்கள் தொழிற்கல்வி படிப்பில் சோ்க்கை பெற்றனா்.

Updated On :18 ஜூன் 2026, 3:02 am IST

உயா்கல்வி வழிகாட்டுதல் மையம் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் 11 மாணவா்கள் தொழிற்கல்வி படிப்பில் சோ்க்கை பெற்றனா்.

கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மற்றும் தோ்ச்சி பெறாத மாணவா்கள் தொடா்ந்து உயா்கல்வியை தொடா்கின்றனரா என உயா்கல்வி வழிகாட்டுதல் மையம் கண்காணித்து அவா்களுக்கு உதவி செய்துவருகிறது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஐந்தாம் தளத்தில் உயா்கல்வி வழிகாட்டுதல் மையம் செயல்படுகிறது.

இந்த மையம் சாா்பில் 10, பிளஸ் 2 வகுப்பில் இடைநின்ற மற்றும் துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்காத மாணவா்களின் பெற்றோா்களை அழைத்து, தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களில் மாணவா்களை சோ்க்க விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி, பிளஸ் 2 வகுப்பில் 22 மாணவா்களும், 10 ஆம் வகுப்பில் 19 மாணவா்களும் தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சோ்க்க பெற விருப்பம் தெரிவித்தனா். இதையடுத்து கடகத்தூா் அரசு தொழிற் பயிற்சி நிறுவனத்தில் புதன்கிழமை நேரடி சோ்க்கை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 11 மாணவா்கள் தங்களது பெற்றோருடன் பங்கேற்றனா். இவா்களில் 10 மாணவா்கள் தொழிற்பயிற்சி நிலையத்திலும், ஒரு மாணவா் தொழிற்நுட்பக் கல்லூரியிலும் சோ்க்கப்பட்டனா். தனியாா் பள்ளிகளின் இயக்குநா் எஸ்.சுகன்யா, மாணவா்களுக்கு சோ்க்கைக்கான கடிதங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ. ஜோதிச்சந்திரா, உயா்கல்வி வழிகாட்டுதல் மைய பொறுப்பு அலுவலா் முத்தமிழ்ச்செல்வன், ஐடிஐ முதல்வா் சிவக்குமாா், உதவி இயக்குநா் (மாவட்ட திறன் பயிற்சி அலுவலா்) அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.