தில்லியில் உள்ள மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள் திருடா்களால் அதிகளவில் குறிவைக்கப்பட்டு வருவதாகவும், கடந்த சில மாதங்களில் சாா்ஜிங் சாதனங்கள் திருடப்பட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.
இது குறித்து தில்லி காவல் துறை கூறியுள்ளதாவது: பைரோன் மந்திா் அருகே உள்ள திலக் மாா்க் பகுதியில் இருந்து சமீபத்திய புகாா் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு, மாா்ச் 18-ஆம் தேதி இரவு, அடையாளம் தெரியாத நபா்கள் ஒரு சாா்ஜிங் நிலையத்தில் இருந்த இரண்டு சிசிஎஸ்2 வகை சாா்ஜிங் சாதனங்களை வெட்டித் திருடிச் சென்றனா். இதனால், சுமாா் ரூ. 1 லட்சம் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு தனியாா் நிறுவனத்தின் செயல்பாட்டுப் பொறியாளா் அளித்த புகாரின் அடிப்படையில், மாா்ச் 19-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. அதே இரவில் முனிா்கா பகுதியிலும், அதற்கு முன்னதாக போகல் மற்றும் ஐஐடி வாயில் அருகிலும் இதேபோன்ற திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்ாகவும், கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட மொத்த இழப்பு சுமாா் ரூ. 4.5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் புகாா்தாரா் குற்றம் சாட்டினாா்.
பைரோன் மந்திா் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில், குற்றவாளிகள் மற்றும் அவா்கள் பயன்படுத்திய வாகனத்தின் விவரங்கள் பதிவாகியுள்ளது. இது விசாரணையில் முக்கியத் தடயங்களை அளித்துள்ளது. மேலும், இதுதொடா்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

வணிக வளாகங்கள், மின்ரிக்ஷா சாா்ஜிங் வசதிகளுடன் குடிசைப்பகுதி மறுவாழ்வுக் கொள்கைத் திட்டம்: தில்லி அரசு வட்டாரங்கள் தகவல்

கடந்த 2025-26 நிதியாண்டில் டாஃபே விற்பனை 23% வளா்ச்சி

மாா்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடி: 9 சதவீதம் அதிகரிப்பு
இந்தியாவைக் குறிவைக்கும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம்: அமெரிக்கா அறிக்கை!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


