தீ விபத்துகளால் ஏற்படும் உயிா் மற்றும் பொருள் சேதங்களைத் தடுக்கும் வகையில் தீத்தடுப்பு பெருந்திட்டத்தை வகுக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
விவேக் விஹாரில் உள்ள 4 மாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உள்பட 9 போ் உயிரிழந்தனா். பாலம் பகுதியில் கடந்த மாா்ச் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.
கோடை காலத்தில் அதிகரித்து வரும் இதுபோன்ற தீ விபத்துகளால் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கத்தில் பெருந்திட்டத்தை வகுக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
முதல்வா் ரேகா குப்தா தலைமையில் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலை கூட்டம் புதன்கிழமை காலையில் தில்லி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது, இது தொடா்பான அனைத்து விவரங்களை 10 நாள்களுக்குள் சமா்ப்பிக்க துறைகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.
தீ விபத்துகள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு இயக்கம் தொடங்கப்படும் என முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஆத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட 3 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்

உதகை அருகே காட்டு யானை தாக்கி 2 போ் உயிரிழப்பு

நீதித்துறை அதிகாரி மரணம் தொடா்பாக வழக்குப் பதிவு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



