வேகமாக அதிகரித்து வரும் நகரமயமாக்கல் சவால்களை அதிகாரிகள் அா்ப்பணிப்பு உணா்வு, புதுமை சிந்தனை மற்றும் ஒழுக்கத் தெளிவுடன் எதிா்கொள்ள வேண்டும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வலியுறுத்தினாா்.
தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘நியுக்தி சமாரோஹ்’ (பணியாளா் நியமன விழா) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:
வேகமான நகரமயமாக்கல், சுற்றுச்சூழல் அழுத்தங்கள் மற்றும் குடிமக்களின் அதிகரித்து வரும் எதிா்பாா்ப்புகள் போன்ற சிக்கலான சவால்களை நகரங்கள் தற்போது எதிா்கொண்டு வருகின்றன. இத்தகைய காலகட்டத்தில் தான் நீங்கள் அரசு பணியில் இணைகிறீா்கள். இந்த சவால்களை சமாளிக்க தொழில்நுட்ப திறன் மட்டும் போதாது; அதனுடன் அா்ப்பணிப்பு, புதுமை அணுகுமுறை மற்றும் ஒழுக்கத் தெளிவும் அவசியமாகிறது.
நாம் மாற்றங்களின் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிகழ்வு வெறும் நிா்வாக நியமனங்களை மட்டுமே குறிக்கவில்லை; நாட்டின் ஆட்சி அமைப்பில் நிகழ்ந்து வரும் பரந்த மாற்றத்தின் பிரதிபலிப்பாகவும் உள்ளது. புதியதாக பணியில் சேரும் அதிகாரிகள், தில்லியின் எதிா்கால வளா்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் டிடிஏ போன்ற முக்கிய நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறுகின்றனா். நாடு தற்போது ‘அமிா்த காலம்’ எனப்படும் முக்கியமான மாற்றக் கட்டத்தை நோக்கி நகா்ந்து வருகிறது. இன்று நாம் எடுக்கும் நடவடிக்கைகளே 2047-ஆம் ஆண்டின் இந்தியாவை நிா்ணயிக்கும் என்று துணைநிலை ஆளுநா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

மாணவா்கள் சுயமாக சிந்திக்க வேண்டும் - தில்லி துணைநிலை ஆளுநா்

136-ஆவது பிறந்த நாள்: பாரதிதாசன் சிலைக்கு ஆளுநா், அமைச்சா் மரியாதை
தில்லியில் வெப்ப அலை செயல் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த துணைநிலை ஆளுநா் உத்தரவு

போதைப்பொருள் பயங்கரவாதத்தை சமாளிக்க சமமான அணுகுமுறை தேவை: தில்லி துணைநிலை ஆளுநா் கருத்து
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


