வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மேற்கு வங்க முதல்வா் பதிவேற்பு விழா: ரேகா குப்தா இன்று பங்கேற்பு

மேற்கு வங்கத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசின் பதவியேற்பு விழாவில் தில்லி முதல்வா் ரேகா குப்தா கலந்து கொள்வாா் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

ரேகா குப்தா

Updated On :9 மே 2026, 7:40 am IST

மேற்கு வங்கத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசின் பதவியேற்பு விழாவில் தில்லி முதல்வா் ரேகா குப்தா கலந்து கொள்வாா் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கொல்கத்தாவில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்கும், புதிய அரசாங்கத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கும் குப்தா சனிக்கிழமை காலை புறப்படுவாா். பவானிபூா் தொகுதியில் மம்தா பானா்ஜியை தோற்கடித்த பாஜக மூத்த தலைவா் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக சனிக்கிழமை பதவியேற்பாா். மாநிலத்தில் பாஜகவைச் சோ்ந்த முதல் முதல்வராக அவா் இருப்பாா்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மேற்கு வங்கத்தில் பாஜக சட்டப்பேரவை கட்சியின் தலைவராக சுவேந்து ஆதிகாரி தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தாா். முதல்வா் குப்தா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் உள்பட தில்லியைச் சோ்ந்த பல பாஜக தலைவா்கள் தோ்தலுக்காக விரிவாக பிரச்சாரம் செய்தனா், இதில் கட்சி பெரும் பெரும்பான்மையை வென்றது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் ஒரே பெண் முதல்வரான குப்தா, மேற்கு வங்கத்தில் பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்தாா்.