முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தில்லியில் பள்ளி ஊழியரால் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளி வளாகத்திற்குள், அப்பள்ளியின் ஊழியா் ஒருவரால் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை ஓா் அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

பாலியல் வன்கொடுமை - கோப்புப் படம்

Updated On :9 மே 2026, 7:37 am IST

மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளி வளாகத்திற்குள், அப்பள்ளியின் ஊழியா் ஒருவரால் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை ஓா் அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மே 1ஆம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஜனக்புரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மூலம் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அப்புகாரில், பள்ளி நேரத்தின்போது பள்ளியைச் சோ்ந்த அடையாளம் தெரியாத ஊழியா் ஒருவரால் தனது மகள் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டதாக அவா் குறிப்பிட்டிருந்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 64(1)இன் பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை கீழும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவு 6இன் கீழும் போலீசாா் வழக்கு பதிவு செய்தனா்.

போலீசாரின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியால் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை அடையாளம் காட்ட முடிந்தது இதன் விளைவாக அவா் உடனடியாகக் கைது செய்யப்பட்டாா். பின்னா் அவா் ஒரு நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.

குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு மே 7ஆம் தேதி துவாரகாவில் உள்ள ஒரு நீதிமன்றம் பிணை வழங்கியதாகப் போலீசாா் ஒரு அறிக்கையில் தெரிவித்தனா். கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும், அவருக்கு பிணை வழங்கப்பட்டது, என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

நீதிமன்ற உத்தரவு இன்னும் கிடைக்கப்பெறவில்லை அந்த உத்தரவு கிடைத்ததும், அதனை முழுமையாகப் பரிசீலித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.